பக்கம்:மதன கல்யாணி-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 93

ஆனால் இதில் இன்னொரு விசேஷம் இருக்கிறது. தாசிகளின் குணம் என்னவென்றால், பணம் கையில் வைத்துக் கொண்டு இருப்பவரைத் தான் அவர்கள் உள்ளே சேர்த்துக் கொள்ளுவார் கள். ஆனால் என்னைத் திருடர்கள் அடித்து என்னுடைய பொருளை எல்லாம் அபகரித்துக் கொண்டார்கள் என்பதை உணர்ந்தும், நீ என்னிடம் அன்பும் மதிப்பும் வைத்து என்னை மரியாதையாகவும் கண்ணியமாகவும் நடத்துவதைக் காண, நீதக்க பெரிய மனுவி என்பதையும், சிநேகம் செய்ய யோக்கியமானவள் என்பதையும் நான் கண்டு கொண்டேன் என்றாள்.

அதைக் கேட்ட அந்த மங்கை மகிழ்ச்சி அடைந்து தனது அழகிய பல்வரிசைகள் வெளியில் தெரியும்படி வசீகரமாகப் புன்னகை செய்து, “தாங்கள் வயசில் மிகவும் பாலியமாக இருந்தாலும், ஏதோ தவறு நடந்து விட்டாலும் அதைப் பாராட்டாமலும் எதிராளியின் மனம் கோணாமலும் சாமார்த்தியமாகவும் சாதுர்யமாகவும் பேசி சமயோசிதமாக நடந்து கொள்வதைக் காண, எனக்குத் தங்கள் விஷயத்தில் உண்டாகும் மதிப்புக்கு அளவே இல்லை. இயற்கை யிலேயே உயர்குடிப் பிறப்புள்ளவர்கள் இப்படித்தான் நடந்து கொள்ளுவார்கள். அதிருக்கட்டும்; தாங்கள் யாரைத் தேடி இந்த இடத்துக்கு வந்தீர்கள்?”

மைனர்:- உன்னிடம் உண்மையைச் சொல்லாமல் மறைப்பதில் என்ன பயன்? அந்த மோகனாங்கி இங்கே இருப்பதாகச் சொன்னார்கள். அவளையே தேடிக்கொண்டு வந்தேன்- என்றான்.

அதைக் கேட்ட அந்த பெண்ணின் முகம் சிறிது மாறுதல் அடைந்தது ஆனாலும், அவள் தனது புன்னகையால் அதை மறைத்துக் கொண்டு “ஒகோ! அப்படியா! அந்த ஜெக ஜாலியையா நாடி வந்தது; சரிதான் சரிதான்; இப்போது தான் உண்மை தெரிகிறது, நானும் அதே நாடகத்தில் இருப்பதால், இந்தத் தவறு ஏற்பட்டதென்பது நன்றாகத் தெரிகிறது”

அதற்குள் மைனர்தான் இருந்த இடத்தை விட்டு எழுந்து, அவள் உட்கார்ந்திருந்த சோபாவிற்கு மெல்ல வந்து அவளுக்கு அண்டையில் நெருங்கினாற் போல உட்கார்ந்து கொண்டு, “நீயும் அதே நாடகத்தில் இருக்கிறேன் என்கிறாய்! உன்னுடைய பெயர் என்ன?” என்றான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/111&oldid=646993" இலிருந்து மீள்விக்கப்பட்டது