பக்கம்:மதன கல்யாணி-1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மதன கல்யாணி

இப்படித் தான் வாய் கொண்ட மட்டும் உறுதி சொல்லி வெகு தாராளமாகப் பேசுகிறது வழக்கம் என்று என்னுடைய வேலைக் காரக் கிழவி அடிக்கடி சொல்லுவாள்; அது இப்போது நினைவுக்கு வருகிறது. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்று சொல்லுவார் கள். அதைப்போல ஒரு ஸ்திரீ எவ்வளவு தான் அழகாய் இருந்தாலும், அவள் புருஷனுடைய மனம் கோணாதபடி நடந்து கொண்டாலும், பிள்ளைப்பேறு, வயசு அதிகரித்தல் முதலியவற் றால் அவளுடைய யெளவன காலத்து அழகும் கவர்ச்சியும் அதிசீக்கிரத்தில் போய்விடும். புருஷர்களுடைய ஆசையோ, அவர்கள் கிழவராகிற வரையில் பாலியமாகவே இருக்கிறது. நிற்க, அவர்கள் பிற மாதரை விரும்புவதைக் கண்டிப்பதற்கு, அவர் களுக்கு மேற்பட்டவர்கள் இல்லை. ஆகையால் அவர்கள் கிழவியாய்ப் போன தங்களுடைய முதல் பெண்சாதியை விட்டுப் புதிய புதிய யெளவன மடந்தையரை விரும்புகின்றனர். இது உலகத்தில் சாதாரணமாக நடக்கும் காரியம். அக்கினி சாட்சியாகத் தாலி கட்டினவளாய் இருந்தால், தீராப் பொரியே என்று, புருஷன் அவளுடைய கட்டுப்பாட்டில் நிற்க வேண்டியது அவசியமாய்ப் போகிறது. என்னுடைய சங்கதி அப்படியல்ல; இது அக்கினி சாட்சியாகச் செய்த கல்யாணத்தைப் போல உறுதியுள்ளதல்ல. இரண்டொரு மாதம் வரையில் தாங்கள் என்னோடு சந்தோஷமாக இருப்பீர்கள் நாளைக்கு நான் நாலைந்து குழந்தைகளைப் பெற்று விட்டால், தாங்கள், அழுக்கான தங்களுடைய மேலங்கியை விலக்குவது போல, என்னை விலக்கிவிட்டு மோகனாங்கியிடம் போய்ச் சேர்ந்து விடுவீர்கள். அதன் பிறகு என் கதி என்ன ஆகும்? என்னுடைய குழந்தைகளின் கதி என்ன ஆகும்? இந்த விஷயங் களை எல்லாம் நாம் முன்னாகவே யோசிப்பது நல்லதல்லவா?” என்று நயமாகக் கூறினாள்.

அதைக் கேட்ட மைனர் ஒருவாறு லஜ்ஜை அடைந்தவனாய், “பாலா? இதெல்லாம் என்ன சந்தேகம்? எனக்குக் குழந்தைகளும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்; நீ இப்போதிருப்பது போல எப்போதும் ஒரே குழந்தையாக என்னோடு இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். நீ ஏன் அனாவசியமான சந்தேகங் களை எல்லாம் வரவழைத்துக் கொண்டு இப்போதே கவலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/168&oldid=649609" இலிருந்து மீள்விக்கப்பட்டது