பக்கம்:மதன கல்யாணி-1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 மதன கல்யாணி

சப் இன்ஸ்பெக்டர்- அது நமக்கு அக்கறை இல்லை. திருடர் வந்தபோது இவள் தனிமையில் இருந்ததாகச் சொல்லியிருப்பதால், நீதிருடரோடு வந்தவன் என்றே ஏற்படுகிறது. இவள் மயக்கமாகப் படுத்திருப்பதால், இவளை இன்னம் ஒருதரம் கேட்கவும் இப்போது சாத்தியப்படாது; அப்படிக் கேட்பதும் அநாவசியம். எல்லாவற்றிற்கும் உன்னை ஸ்டேஷனுக்குக் கொண்டு போகிறோம். நீ குற்றமற்றவன் என்பதை ருஜூப்படுத்திக் கொள்.

மைனர்:- ஐயா! அதை நான் இப்போதே ருஜூப்படுத்துகிறேன். அதோ மரப்பெட்டியில் தொங்குகிற சாவிகளுள் ஒன்றால் சுவரில் இருக்கும் அலமாரியைத் திறவுங்கள்; அதில் ஒரு பத்திரத் இருக்கிறது. அதை நான் சற்று முன்பாகவே இவளுக்கு எழுதிக் கொடுத்தேன். அலமாரி இன்னமும் பூட்டப்பட்டிருப்பதால் திருடர் கள் அதைத் திறக்கவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. ஆகையால், பத்திரம் அதில் அவசியம் இருந்தே தீரவேண்டும். இவள் என் கண்ணுக் கெதிராகவே அதை அதற்குள் வைத்தாள் - என்றான்.

அதைக் கேட்ட நாடகத்தலைவர், பெருத்த வியப்பும் திகைப்பும் அடைந்து, தமது ஆசை நாயகி அப்படியும் செய்திருப்பாளா என்பதை நம்பமாட்டாமல், ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து, “எங்கே இதோ நானே அலமாரியைத் திறக்கிறேன். அதையும் பார்த்து விடுவோம். இது பெருத்த ஆச்சரியமான கதையாக இருக்கிறதே! இவள் அன்னிய புருஷனோடு பேசவே மாட்டாள் என்பதை நான் ஆயிரம் விதத்தில் உறுதியாகச் சொல்லுவேன்” என்று கூறிய வண்ணம், உடுப்புப் பெட்டியில் தொங்கிய கொத்துச் சாவியை எடுத்து அவற்றுள் ஒன்றால் அலமாரியைத் திறந்தார். அவரும் சப் இன்ஸ்பெக்டருமாக அந்த அலமாரியை ஆராய்ச்சி செய்தனர். அதற்குள், கேசத்தை வளைந்து பின்னிக் கொள்வதற்குத் தேவையான கூந்தல் தைலங்கள், சாந்துக் கிண்ணிகள், மைச்சிமிழ், கண்ணாடி, ரோஸ்பவுடர், செரிபிளாஸம், சோப்புகள் முதலிய சாமான்களே காணப்பட்டனவன்றி காகிதமே காணப்படவில்லை. அந்தக் கண்கட்டு வித்தையைக் கண்ட மைனர் ஒன்றும் பேச மாட்டாமல் திருடனைப் போல விழித்துக் கொண்டு நிற்க, கிழவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/186&oldid=649628" இலிருந்து மீள்விக்கப்பட்டது