பக்கம்:மதன கல்யாணி-1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 மதன கல்யாணி

அணைத்துக் கொள்ள முயன்று துரத்திய போதும், பிறர் எவரேனும் தன்னைக் கவனிப்பார்களே என்ற நினைவே அவளது மனதில் தோன்றாதிருந்தமையால், திடீரென்று பின்புறமாக அந்தச் சயன மாளிகைக்குள் தனது குமாரிகள் இருவரும் வந்ததைக். காணவே, அவளது மனதில் பெரும் பீதி உண்டாகி விட்டது. தான் செய்தது பெருத்த தவறு என்ற எண்ணமும், தனது நடத்தையைப் பற்றிப் புதல்வியர் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற கவலையும் அச்சமும் எழுந்து அவளை வளைத்துக் கொண்டன. தான் சிறிதும் துன்மார்க்கமான நினைவின்றி, மதனகோபாலனைத் துரத்தி இருந்தாலும், பிறர் தனது நடத்தையைத் தவறானது என்றே மதித்து விடுவார்கள் என்ற நினைவும், தான் உண்மையை உள்ளபடி எடுத்துச் சொல்லி எவ்விதமாக உறுதிப்படுத்தினாலும், தனது சொல்லை எவரும் நம்பமாட்டார்கள் என்ற நினைவும் தோன்றவே, கல்யாணியம்மாளது சரீரம் கிடுகிடென்று ஆடியது. தான் மதியினத்தினால் செய்த ஒர் அற்பமான பிழையினால், என்றைக்கும் அழியாத இழிவும், தலை குனிவும், அபவாதமும், மானக்கேடும் தனக்கு உண்டாகக்கூடிய ஆபத்தான நிலைமையில் தான் இருந்ததைக் காண, அவளது மெய்யும் மனமும் கட்டிலடங் காமல் பதறின. தான் கேவலம் விபசார நடத்தை உடையவள் என்று தனது புத்திரிகள் நினைத்து விடுவார்களானால், அவர் களுக்குத் தன்னிடம் உள்ள மதிப்பும் மரியாதையும் ஒழிந்து போய்விடும் என்ற கவலையும் எழுந்து வருத்தியது. அது நிற்க, தனது புதல்வியரைத் தவிர, வேலைக்காரர்களுள் எவரேனும் வந்து இங்கே நிகழ்ந்தவற்றைக் கவனித்திருப்பார்களோ என்ற பெருத்த திகிலும் அவளது மனத்தில் குடிகொண்டது. தனது வாழ் நாள் முழுதையும் பாதிக்கக்கூடிய மகா அபாயகரமான நிலைமையில் தான் இருந்ததை ஒரே நொடியில் கண்டு கொண்ட கல்யாணி யம்மாள் தனது மானத்தையும் நற்பெயரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாளே அன்றி, மதன கோபாலனது மான அவமானத்தைப் பற்றி ஒரு சிறிதும் நினைக்கவில்லை. நிற்க, மகா உன்னதமான பதவியில் உள்ள தான் எவர்மீதும் வைக்காத பிரியத்தையும், வாத்சல்யத்தையும், மிகவும் கேவலமான நிலைமையில் இருந்த மதனகோபாலனிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/188&oldid=649630" இலிருந்து மீள்விக்கப்பட்டது