பக்கம்:மதன கல்யாணி-1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 மதன கல்யாணி

யம்மாள், “நீங்கள் கோபங்கொள்ளாமல் சந்தோஷமாக இருப்பதில் இருந்து, விபரீதமான விஷயம் எதுவும் நேரவில்லை என்பது ஏற்படுகிறது. ஆகையால், எங்கள் மனதில் முதலில் உண்டான கவலை ஒருவாறு நீங்கியது” என்றாள்.

உடனே கல்யாணியம்மாள், “இந்த விஷயத்தை வாயில் வைத்துப் பேசவே எனக்கு வெட்டகமாக இருக்கிறது. உங்களிடம் இதை வெளியிடாமல் இருக்கவும் முடியவில்லை; வெளியிடவும் அசங்கியமாக இருக்கிறது. சாகிற காலத்தில் சங்கரா சங்கரா என்கிறபடி இவ்வளவு காலமும் இல்லாமல், எனக்கு இப்போது ஒருவன் கள்ளப்புருஷனாக இருக்க ஆசைப்படுகிறான்” என்று வேடிக்கை போலவும் புரள யாகவும் கூறிய வண்ணம் தனது மூத்த புதல்வியின் முகத்தைக் கபடமாக நோக்கினாள். அந்த வார்த்தையைக் கேட்ட பெண்கள் இருவரும் பெருத்த திகைப்பும் ஆச்சரியமும் அடைந்தவராயினர்; கோமளவல்லி தனது தாயை நோக்கி, “அப்படிக் கேட்ட துஷ்டன் யாரம்மா?” என்று கபட மின்றிக் கேட்க, துரைஸானியம்மாள் “பெண்டாட்டிக்கு ஏங்கிய கிழவன் எவனாவது தான் அப்படிச் செய்திருப்பான்?” என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாளது முகம் வெட்கத்தினாலும் கோபத்தினாலும் சடக்கென்று மாறுபட்டது. “துரைஸானியம்மா! உனக்கு இவ்வளவு வயதாகியும் இன்னதைத் தான் பேசுவது, இன்னதைப் பேசக்கூடாது என்று தெரிந்துகொள்ள வில்லையே! நீ சொல்வதிலிருந்து நான் ஒரு கிழவனே ஆசைப்படக்கூடிய கேவலமான HI கிழவி என்ற பொருள்பட நீ பேசுகிறாயல்லவா, நான் கிழவிதான்; அதைப்பற்றி சந்தேகமில்லை. கிழவியேர், குமரியோ, என்னைப் பார்த்துப் பிறன் ஆசைப்படுவான் என்ற வார்த்தையை, உன்னைப் பெற்ற தாயாராகிய எனக்கெதிரிலேயே நீ வாய் கூசாமல் சொல்லுவது உனக்குக் கொஞ்சமும் அழகல்ல. இங்கே கொஞ்ச நேரத்துக்கு முன் நடந்ததுகூட எனக்கு அவ்வளவு சங்கடம் உண்டாகவில்லை. நீ சொன்னதே மனசை அறுக்கிறத” என்று சிறிது கடுமையாக மொழிந்தாள்.

அதைக் கேட்ட துரைஸானி குறும்பாகக் கண் சிமிட்டி, “வேறே யார் எதைச் செய்தாலும் அம்மாளுக்கு சந்தோஷமாக இருக்கிறது;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/190&oldid=649633" இலிருந்து மீள்விக்கப்பட்டது