பக்கம்:மதன கல்யாணி-1.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 மதன கல்யாணி

பிரித்து முகத்திற்கெதிரில் பிடித்துக் கொண்டாள். அப்போது மீனாகூஜியம்மாள் சிறிது சிந்தனை செய்த பின் கல்யாணியம் மாளை நோக்கி, “என்னிடம் வெளியிடக் கூடாமல் அப்படி மறைக்கக்கூடிய விஷயம் என்னவாக இருக்கலாம் என்று நான் எவ்வளவோ யோசனை செய்தும் ஒன்றும் புலப்படவில்லையே! விஷயம் நிரம்பவும் விபரீதமானதல்லவே?” என்றாள்.

கல்யாணியம்மாள், “அப்படி ஒன்றும் விபரீதம் நடக்கும்படி நான் விட்டுவிடவில்லை; அது ஒரு பைத்தியக்காரனுடைய சங்கதி. அதை வாயில் வைத்துப் பேசுவதே அசங்கியமாக இருக்கிறது. அதை வெளியிடுவதனால், நமக்கு அவமானம் உண்டாகப் போகிறதில்லை. அதை எப்படி வெளியிடுகிற தென்பதே எனக்குத் தெரியவில்லை; ஆனால் அதைக் கேட்பவர்கள் என்ன நினைப் பார்கள் தெரியுமா? இவள் ஏதோ சம்சயப்படும்படியாக நடந்து கொண்டிருக்கிறாள். அதனாலே தான், அவன் இவ்வளவு தூரம் துணிந்து கேட்டிருக்கிறான் என்று எண்ணிக் கொள்ளலாம்.”

மீனாr (மிகவும் வியப்படைந்து):- விடுகதை போடுவது போல நீங்கள் மறைத்து மறைத்துப் பேசுகிறீர்கள். எனக்கு ஒன்றும் புவியவே இல்லை. நன்றாகத்தான் சொல்லுங்களேன். இங்கே வேறே யாரிருக்கிறார்கள்? நாங்கள் எல்லோரும் அன்னியர் கள் அல்லவே, நான் உங்களுடைய பழைய சிநேகிதை. கண்மணி யம்மாளே உங்களுடைய மருமகள். நீங்கள் வெட்கப்படாமல், விஷயத்தைச் சொல்லுங்கள் - என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், கண்மணியின் பெயரைக் கேட்டவுடன், அப்போதே ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டவள் போல நடித்து, அவளிருந்த பக்கம் சடக்கென்று திரும்பி, “ஏன் குழந்தாய் கண்மணி! நீயும் வீணை கற்றுக் கொள்ளுகிறாய் என்பது இப்போது தான் ஞாபகத்துக்கு வந்தது. உனக்கும் அந்த மதனகோபாலன் என்ற பையன் தானே கற்றுக் கொடுக்கிறான்?” என்றாள்.

எதிர்பாராத அந்தக் கேள்வி கண்மணியின் செவியில் பட்ட உடனே, அவள் திடுக்கிட்டு வியப்பும் திகைப்பும் கொண்ட வளாய், சடக்கென்று தனது முகத்தை கல்யாணியம்மாளிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/204&oldid=649648" இலிருந்து மீள்விக்கப்பட்டது