பக்கம்:மதன கல்யாணி-1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 189

காணவே, இனி தனது வேலை சுலபத்தில் நடந்துவிடும் என்ற ஒரு துணிவும் நம்பிக்கையும் ஏற்பட்டு விட்டன. நிற்க, தான் முதல் நாள் மதனகோபாலனை ஆலிங்கனம் செய்ய முயன்ற போது, அவன் அது தவறான காரியம் எனக் கூறி, அவ்வாறு செய்ய மறுத்துப் போனபின், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அவன் மீது அபாண்டமான குற்றம் சுமத்தி அவனை இழிவாகப் பேசினாள் ஆனாலும், அவளது மனமோ அந்தரங்கத்தில் அவன் மகா நற்குணம் வாய்ந்த உத்தம புருஷன் என்றும், அன்னிய ஸ்திரீகளை விஷமென மதிக்கும் ஏகபத்தினி விரதன் என்றும் நினைத்து, அவனது மேம்பாட்டைப் பற்றி வியப்புற்றிருந்தது. ஆனால், அவன் மீனாகூஜியம்மாளது பங்களாவில் ஏதோ தவறு செய்திருக்கிறான் என்பதைக் கேட்டவுடனே, அவள் கொண்டிருந்த நல்ல அபிப்பிராயம் மாறிவிட்டது. எப்படியெனில், மீனாகூஜியம்மாள் வயதான கிழவி ஆதலால், மதனகோபாலன் அவள் மீது விருப்பம் வைத்திருக்க மாட்டான் ஆதலால் அவனுக்கும் கண்மணிக்குமே அந்தரங்கமான நட்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கல்யாணியம்மாள் யூகித்துக் கொண்டு அதையே உறுதியாக நம்பினாள். நல்ல யெளவனமும் உயர்ந்த அழகும் வாய்ந்த கண்மணியிடத்தில் அவன் ஆசை வைத்திருப்பது பற்றியே, தனது ஆலிங்கனத்தை வித்தியாசமாகவும் அசட்டையாகவும் கருத நேர்ந்தது என்ற நினைவும் உடனே தோன்றியது. உலகத்தில் மனிதன் தான் தவறு செய்பவன் ஆனாலும், அது அவனது புத்தியில் படுகிறதில்லை. பிறர் தவறு செய்யக் கூடாது என்பதும், அப்படி எவரேனும் செய்தால், அதைக் கண்டு துவித்துப் புரளி செய்வதும் பெரும் பாலோரது இயற்கையாக இருக்கின்றதல்லவா! அதற்கிணங்க கல்யாணியம்மாள், தனக்கு மருமகளாக வரிக்கப்பட்டுள்ள கண்மணியம்மாள் மதனகோட்ாலன் மீது ஆசை கொண்டதாக தனக்குத் தானே நிச்சயித்துக் கொண்டு, அதைக் குறித்து, ஆத்திரமும், அதிருப்தியும், அவளது குணத்தைப் பற்றி இழிவான அபிப்பிராயமும் கொள்ளத் தொடங்கியே முன் கூறப்பட்ட கேள்வியைக் கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/207&oldid=649651" இலிருந்து மீள்விக்கப்பட்டது