பக்கம்:மதன கல்யாணி-1.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 197

கல்யாணியம்மாள், “மைசூரிலிருந்து வந்த ஆரம்பத்தில் ஒரு சூதும் அறியாமல் குழந்தை போல இருந்த பையன் இந்த ஏழெட்டு மாத காலத்துக்குள் எவ்வளவு பெருத்த காரியம் செய்யத் துணிந்துவிட்டான் பார்த்தீர்களா! அப்படி இருந்தமையாலே தான், அவன் அன்னிய புருஷனாயிற்றே என்பதையும் நாம் கவனி யாமல் நம்முடைய குழந்தைகளிடம் பழகி வீணை கற்பிக்கும்படி அவனை வைத்தது. முதலில் அவனைப்பற்றி நீங்கள் தானே சிபாரிசு செய்து எங்களுடைய பங்களாவிலும் மற்ற பங்களாக் களிலும் அவனை வேலைக்கு அமர்த்தியது. அன்னமிட்டவர் விட்டிலேயே கன்னமிடுவது போல, அவன் உங்களிடத்திலேயே ஏதோ தாறுமாறாக நடந்து கொண்டிருக்கிறான் என்கிறீர்களே! அது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என்றாள்.

மீனாகூஜியம்மாள், “என்னுடைய மைத்துனர் அவனுக்குக் கொடுத்தனுப்பிய சிபாரிசுக் கடிதத்தை ஜாக்கிரதையாக இன்னமும் நான் பெட்டியில் வைத்திருக்கிறேன். வேண்டுமானால் அை எடுத்துத் தருகிறேன். நீங்களே படித்துப் பாருங்கள்; அவர் அவனை இந்திரன் சந்திரன் என்றும், ஒரு பானைக் கஞ்சியை உப்பில்லாமல் குடிக்கக்கூடியவன் என்றும் வாய்கொண்ட மட்டும் புகழ்ந்து எழுதி இருக்கிறார். மைத்துனர் பதினைந்து இருபது வருஷ காலமாக மைசூரிலேயே இருக்கிறாரே; அவருக்கு அவனுடைய குணாதிசயங்கள் நன்றாகத் தெரிந்திருக்குமே; அவர் அவ்வளவு தூரம் எழுதும்போது, பையன் யோக்கியனாகவே இருப்பான் என்று நம்பியே நான் என்னுடைய பங்களாவிலும், மற்றவர்களுடைய பங்களாவிலும் அவனை அமர்த்தியது. அவன் இப்படிக் கழுதை நிறத்துக்கு வந்துவிடுவான் என்பதை யார் கண்டார்கள்?” என்றாள்.

கல்யாணியம்மாள்:- உங்களுடைய மைத்துனர் என்ன செய்வார்! அவனுடைய மேல் வேஷத்தைக் கண்டு நாம் இதுவரையில் அவனை யோக்கியன் என்று நம்பி மோசம் போக வில்லையா? அதைப் போலவே, அவன் அவரிடத்தில் இருந்தவரையில் பரம யோக்கியனாக நடந்து கொண்டிருப்பான். அவரிடத்தில் யெளவனப் பருவமுள்ள பெண்கள் இருந்து, அவன் அங்கே பழகி இருந்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/215&oldid=649660" இலிருந்து மீள்விக்கப்பட்டது