பக்கம்:மதன கல்யாணி-1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#98 மதன கல்யாணி

அப்போது அவனுடைய உண்மையான யோக்கியதையை அவர் அறிந்து கொண்டிருப்பார். அவரோ ஏகாங்கி; அவனுடைய குணத்தை அறிந்து கொள்ள அவருக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டிராது. இப்போது அதையெல்லாம் நினைத்து வருத்தப்படுவதில் என்ன உபயோகம்? அவனை நாம் இதுவரையில் வைத்துக் கொண்டு இருந்து விட்டோம். அவனும் தான் எப்பேர்ப்பட்ட மனிதன் என்பதை சந்தேகமறக் காட்டிவிட்டான்; எனக்கு நேரமாகிறது; நமக்கு வேண்டிய மனிதர்களுடைய பங்களாக்களுக்கெல்லாம் போய் இந்த விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும் என்கிறீர்களே அந்த விஷயத்தில் நீங்கள் எனக்கு ஒர் உதவி செய்ய வேண்டும். இந்தச் சங்கதியை பிறரிடம் நானே எடுத்துச் சொல்வது எனக்கு நிரம்பவும் லஜ்ஜையாக இருக்கிறது. ஆகையால், நீங்களும் என்னோடு கூடவே இப்போது வாருங்கள். நாம் இருவரும் போய் சொல்லிவிட்டு வருவோம்; இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது, நீங்களே அவனை முதலில் புகழ்ந்து அந்த இடங்களில் சிபார்சு செய்து அமர்த்தியவர்கள் ஆகையால், அவனைப் பற்றிய விரோதமான அபிப்பிராயமும் உங்களுடைய வாயிலிருந்து வருமானால் அதற்கு அதிகமான மதிப்புண்டு. நானே போய் இதைச் சொல்ல, என் சொல்லின் மேல் அவனை விலக்கினால், சிபார்சு செய்ததாலும் நினைக்கலாம். ஆகையால் நீங்களும் வரவேண்டும். என்னுடைய பெட்டி வண்டியிலேயே ஏறிக் கொண்டு போவோம்; இப்போது இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய அவசர காரியம் ஒன்றுமில்லையே?” என்றாள்.

அதைக் கேட்ட மீனாகூஜியம்மாள், “ஓ! வருகிறேன். எனக்குப் பிற்பகலில் என்ன வேலை இருக்கிறது. ஒன்றுமில்லை. போவோம் வாருங்கள்” என்று கூறிய வண்ணம் மிகவும் துடிப்பாக எழுந்து நின்றாள்.

அதைக் கண்ட கல்யாணியம்மாள் மகிழ்ச்சியோடு புன்னகை செய்த, “சரி, சந்தோஷம்; போவோம் வாருங்கள்” என்று சொல்லிய வண்ணம் எழுந்தவள், கண்மணியை நோக்கினாள். அவள் தனது பக்கத்தில் முகத்தைக் காட்டாமல் வேறு பக்கத்தில் திரும்பிக் கொண்டிருந்தது, கல்யாணியம்மாளுக்கு நிரம்பவும் சம்சயமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/216&oldid=649661" இலிருந்து மீள்விக்கப்பட்டது