பக்கம்:மதன கல்யாணி-1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 199

இருந்தது; தான் போய் வருவதாக அவளிடம் சொல்லிக் கொள்ளப் போகிறவள் போல நடித்து,"குழந்தாய்! கண்மணி நான் போய் விட்டு வருகிறேன். அந்தத் தறுதலை போனால் போகிறான். அதைப்பற்றி கவலைப்படாதே; யோக்கியனான மனிதனாகப் பார்த்து வேறே ஒரு வீணை வித்துவானை அமர்த்தி விடுவோம்: நான் போய்விட்டு வருகிறேன்” என்று கூறிய வண்ணம் கண்மணியின் முகத்தை உற்று நோக்கினாள். அது மகா துக்ககர மாக இருந்ததைக் காணவே, அவள் மதனகோபாலனைப் பற்றி வருந்துகிறாள் என்றும், அவளை அதன் பொருட்டு தான் தண்டிக்க வேண்டும் என்றும் ஓர் எண்ணம் உதித்தது. கல்யாணியம்மாளது மனதில் உடனே ஒரு திர்மானம் ஏற்பட்டது. அவள் அப்போது கண்மணியைப் பார்த்த போது தான் ஏதோ புதிய விஷயத்தை நினைத்துக் கொண்டவள் போல நடித்து, மீனாகூஜியம்மாளை நோக்கிக் கைகொட்டி நகைத்தவளாய் நடந்து வந்து, தான் முதலில் உட்கார்ந்திருந்த சோபாவில் மறுபடியும் உட்கார்ந்து கொண்டு, “நினைக்க நினைக்க, எனக்கே சிரிப்பு உண்டாகிறது. இன்று நான் புறப்பட்டு இங்கே வந்ததன் காரணமே வேறு. நான் அதைச் சுத்தமாக மறந்துவிட்டேன். என்னுடைய முகம் ஒரு மாதிரியாக இருக்கிறது என்று நீங்கள் கேட்டதிலிருந்து நம்முடைய சம்பாஷணை வளர்ந்து, முழுதும் வேறு விஷயத்தைக் குறித்த தாகவே போய்விட்டது. கொஞ்சம் உட்காருங்கள்; நான் என்ன கருத்தோடு வந்தேன் என்பதைச் சொல்லுகிறேன்” என்றாள்.

அதைக் கேட்ட மீனாகூஜியம்மாளும் சந்தோஷமாக நகைத்த வண்ணம், “ஆம் ஆம் உண்மைதான்; அந்தத் தறுதலையின் பேச்சில், இதைப்பற்றிக் கேட்க நானும் சுத்தமாக மறந்து விட்டேன்” என்று கூறிய வண்ணம் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு கல்யாணியம்மாள் எதைப்பற்றிப் பேசுவாளோ என்று ஒருவித ஆவல் கொண்டவளாய் அவளது வாயைப் பார்த்திருந்தாள்.

கல்யாணியம்மாள், “வேறொன்றும் இல்லை. இந்தப் பட்டணத் தைப் போல கெட்டுப் போன ஊர் இந்த ராஜதானிக்குள் எங்குமே இல்லை என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. எப்பேர்ப்பட்ட பரம யோக்கியனாக இருந்தாலும், அவன் இந்த ஊரில் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/217&oldid=649663" இலிருந்து மீள்விக்கப்பட்டது