பக்கம்:மதன கல்யாணி-1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 2O7

வாராதிருந்தது பற்றி பெரிதும் வியப்பும் கவலையும் கொண்டிருந் தனர். ஆதலால் தங்களது தாய் திரும்பி வந்து அழைத்துவரச் சொன்னாள் என்ற செய்தியைக் கேட்கவே, அவர்கள் விரைவாக எழுந்து மிகுந்த ஆவலோடு வந்து தாயின் அந்தபுரத்தை அடைந்தனர். கல்யாணியம்மாள் சென்றிருந்ததன் காரணம், மதன. கோபாலனது முதல் நாளைய நடத்தையைக் குறித்ததாக இருக்குமோ என்று சந்தேகித்திருந்த மடந்தையர், அவ்வளவு நேரம் கழித்து வந்த தாய் தங்களிடம் சுமுகமாகப் பேசமாட்டாள் என்று நினைத்து ஒருவாறு அச்சம் கொண்டு வந்தனர். ஆனால் தங்களது நினைவிற்கு மாறாக, அவள் மகா சந்தோஷத்தோடும் கரை கடந்த அன்போடும் தங்களோடு பேசத் தொடங்கியதைக் காணவே, அவர்கள் இருவருக்கும் அது எதிர்பார்க்கப்படாத இன்பமாக இருந்ததன்றி, தங்களது தாய் எவ்விதமான சந்தோஷ சமாசாரம் சொல்லப் போகிறாளோ என்று நினைத்து, மிகுந்த ஆவல் கொண்டவராய், தங்களது தாய்க்கருகில் நெருங்கி நின்றனர்.

அவர்களைக் கண்ட கல்யாணியம்மாள் கோமளவல்லியையும், துரைசானியம்மாளையும் மாறி மாறி நோக்கிப் புன்னகையும் மகிழ்ச்சியும் காட்டி, “நான் சீக்கிரம் வந்துவிடலாம் என்று நினைத்து உங்களிடத்தில் கூட விவரத்தைச் சொல்லாமல் போனேன். போன இடத்தில் ஒரு முக்கியமான காரியத்தினால் இவ்வளவு நேரம் ஆகி விட்டது. நீங்கள் எட்டு மணிக்கே சாப்பிடுகிறவர்கள்; அம்மாள் வரவில்லையே என்று பட்டினியாகக் காத்துக் கொண்டிருப்பீர் களே என்று நினைத்தே நான் என்னுடைய வேலைகளைக் குறைத்துக் கொண்டு ஒட்டமாக ஓடிவந்தேன். நான் என்ன காரணத்தினால், இவ்வளவு நேரம் வெளியில் தங்கினேன் என்பதை நீங்கள் யூகித்துச் சொல்ல முடியுமா? எங்கே உங்களுடைய சாமர்த்தியத்தைப் பார்க்கலாம். கோமளவல்லிக்கு அவ்வளவு யூகம் உண்டாகாது. துரைஸானியம்மாள் புத்திசாலி, அவள் சொல்லி விடுவாள்’ என்று தனது ஆனந்த பரவசத்தில் தன்னை மறந்தும், தனது புதல்வியரை சந்தோஷப்படுத்த முயன்றும், துரைசானி யம்மாளை வஞ்சகப் புகழ்ச்சி செய்தும் பேசினாள்.

உடனே கோமளவல்லி தனது தாயினிடத்தில் மிகுந்த பயபக்தி வாத்சல்யத்தோடு பேசத் தொடங்கி, “இவ்வளவு நேரம் ஆயிற்றே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/225&oldid=649679" இலிருந்து மீள்விக்கப்பட்டது