பக்கம்:மதன கல்யாணி-1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 மதன கல்யாணி

11-ம் அதிகாரம் ஏழையழுத கண்ணி

அந்த இரண்டு பெண்டீரும் அன்றைய மாலைப் பொழுதிற்குள் சுமார் இருபது பங்களாக்களிற்குள் நுழைந்து, அவற்றில் இருந்தோரை தாம் மறுநாள் நடத்த எண்ணியிருந்த விருந்திற்கும் நிச்சயதார்த்தத்திற்கும் அழைத்துவிட்டு, மதனகோபாலனைப் பற்றிய கட்டுக் கதையை மிகவும் தந்திரமாகவும் சம்சயத்திற்கு இடமின்றியும் வெளியிட்டு, அவர்களுக்கெல்லாம் அவன் மீது பெருத்த கோபமும், அருவருப்பும், பகைமையும் உண்டாகும்படி செய்தவராய், இரவு ஏழரை மணிக்குத் திரும்பினர். அதன் பிறகு மீனாகூஜியம்மாளை அவளது பங்களாவில் இறக்கிவிட்ட கல்யாணியம்மாள் மைனரது போஷகர்களான வக்கீல் சிவஞான முதலியார், சோமநாதபுரம் ஜெமீந்தார் ஆகிய இவர்களது மாளிகை களுக்கும் சென்று, நிச்சயதார்த்த விஷயமாகப் பேசி அவர்களது சம்மதியைப் பெற்றவளாய், அன்று இரவு எட்டரை மணிக்குத் தனது பங்களாவிற்கு வந்து சேர்ந்தாள். தனது மனம் குளிரும்படி அவ்வளவு அதிகமாக மதனகோபாலனுக்கு தான் அன்று தீங்கிழைத்து, தனது கட்டுக்கதையை உண்மை என்று எல்லோரும் நம்பும்படி எளிதில் செய்துவிட்டு வந்ததைப் பற்றியும், அதி சீக்கிரத்தில் கண்மணியின் கலியாணத்தை முடித்து, அவளைத் தனது பங்களாவிற்குக் கொணர்ந்து, அவள் மதனகோபாலன் மீது சரியம் வைத்ததைப் பற்றி, புத்திரனை ஏவி, தக்கபடி அவளைத் தண்டிக்கலாம் என்பது பற்றியும், பரம சந்தோஷமும் குதுகலமும் அடைந்த கல்யாணியம்மாள் முதல் நாள் இரவில் தான் பட்ட பாடுகளை எல்லாம் முற்றிலும் மறந்தவளாய், தனது அந்தப் புரத்திற்குள் நுழைந்தாள். அன்று அவளுக்கெதிரில் குறுக்கிட்ட வேலைக்காரர் வேலைக்காரிகளிடம் எல்லாம், அவள் மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் பேசி, மறுநாள் நிச்சயதார்த்தம் என்ற செய்தியை வெளியிட்டதன்றி, தனது புத்திரிகளை உடனே தனது அந்தப்புரத்திற்கு அழைத்து வரும்படி ஒரு வேலைக் காரியை அனுப்பினாள்.

புதல்வியர் இருவரும், பகல் மூன்று மணிக்கு வெளியில் சென்ற

தங்களது தாய், இரவு எட்டரை மணி நேரம் வரையில் திரும்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/224&oldid=649677" இலிருந்து மீள்விக்கப்பட்டது