பக்கம்:மதன கல்யாணி-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 5

மற்றவன் மாரமங்கலம் என்ற பெருத்த சமஸ்தானத்து ஜெமீந்தாரின் ஏகடத்திரன்; அவன் தந்தையற்றவன் வயது பதினேழிருக்கலாம். அவன் குள்ளமான கருத்த மேனி உடையவன். அவனுக்கே கண்மணியம்மாளை மணம் புரிவிப்ப தென்று, அவனது தாயான கல்யாணி அம்மாளாலும் மீனாகூ அம்மாளாலும் முடிவு செய்யப்பட்டிருந்தது. -

துரைராஜா என்பவன் நன்றாகப் படித்தவன் ஆனாலும், அவன் தனது கல்வியை நல்ல வழியில் உபயோகிக்காமல், தீய வழிகளில் பயன்படுத்தும் துர்க்குணம் உடையவன். நாணயம் நல்லொழுக்கம் என்பவைகளுக்கும் அவனுக்கும் வெகு தூரம்; எத்தகைய துர்நடத்தைக்கும் அவன் பின்வாங்காதவன். மாரமங்கலம் மைனரோ பிஞ்சில் பழுத்தவன்; மூடபுத்தியும், அசட்டுத் துணிவும், அசங்கியமான மொழிகளையே உபயோகிக்கும் இழிகுணமும், கரைகடந்த செருக்கும், ஆணவமும், கோரரூபமும், கூனல் முதுகும், யாவரையும் துவித்து அலட்சியமாக எடுத் தெறிந்து பேசுந்தன்மையும் பெற்றவன். அவ்விருவரும் ஒரு நிமிஷ நேரமும் பிரியாமல் மிகவும் அந்தரங்கமான நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் இணை பிரியாமல் இருந்தது நட்பென்னும் உண்மையான வாத்சல்யத்தினால் கட்டுப்பட்டு இருந்ததன்று ஒரு துஷ்டனுக்கு இன்னொரு துஷ்டனது துணையும் உதவியும் அவசியமாக வேண்டி இருந்தன. துரைராஜாவின், விளையாட்டுச் செலவுக்கு மீனாகூஜியம்மாள் சொற்பமான பணமே கொடுத்து வந்தாள். மைனருக்கோ பெருத்த பணத்தொகை மாதம் மாதம் வந்து கொண்டிருந்தது. துரை ராஜாவுக்கோ சென்னையில் உள்ள விலைமாதரிடம் எல்லாம் நட்புண்டு. மைனருக்கு அந்த விஷயத்தில் பழக்கம் இல்லை. துரைராஜாவின் நட்பிருந்தால், அவனது நட்பினரான பெண்பாலார் யாவரும் தனக்கும் நட்பினராக ஆவார்கள் என்பது மைனரது கருத்து. மைனரது நட்பிருந்தால், அவனது பணப்பையில் எட்டியமட்டும் தனது கையை நுழைக்கலாம் என்பது துரைராஜாவின் எண்ணம். நிற்க, துரைராஜா என்பவன் உலக விஷயங்களில் நன்றாக அடிபட்டவன்; உலகத்தில் என்னென்ன துன்மார்க்கங்கள் இருக்கின்றன என்பதைக் கரைகண்டவன். சென்னையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/23&oldid=649688" இலிருந்து மீள்விக்கப்பட்டது