பக்கம்:மதன கல்யாணி-1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மதன கல்யாணி

இருவருக்கும் நன்றாகக் கல்வி கற்பித்ததன்றி, கண்மணியை வீணை வாசிப்பதில் பயிற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணத் தோடு வீணைவித்துவான் ஒருவனையும் அமர்த்தி இருந்தாள்.

இந்தக் கதை தொடங்கிய மாலையில் கண்மணியம்மாள் ஹம்ஸத்வனி வாசித்தபோது, அந்த வீணை வித்துவான் அவளுக்குச் சற்று துரத்தில் மிகவும் மரியாதையாக விலகி உட்கார்ந் திருந்தான் அவன் மைசூரில் இருந்த மகாவித்துவான் ஒருவரது மகன் என்பதும், அவனும் தந்தையைப் போலவே கீர்த்தி வாய்ந்தவன் என்பதும் எல்லோருக்கும் தெரியவே, ஜெமீந்தார் களின் பங்களாக்களில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கெல்லாம் வீணை கற்பிக்கும்படி அவனை ஏற்படுத்திக் கொண்டனர். மதனகோபாலன் என்ற அழகிய பெயர் கொண்ட வீணை வித்துவானாகிய அந்த யெளவனப் புருஷன் தனது பெயருக்குத் தக்கபடி மன்மதனை வென்ற அழகும் சிவந்த மேனியும் நற்குண நல்லொழுக்கமும் ஆண்மையும் கூரிய புத்தியும் கல்வித் திறமையும் முகத்திலேயே ஜ்வலிக்கப் பெற்றவனாக விளங்கி னான். அவன் தனது நிலைமைக்குத் தகுந்தபடி மரியாதை பணிவு அடக்கவொடுக்கம் முதலியவற்றைப் பெரிதும் காட்டி மிருது வாகவும் அழகாகவும் பேசி கண்மணிக்கு ராக ஆலாபனை பயிற்றிக் கொண்டிருந்தான். கண்மணியம்மாளோ, தான் ஜெமீந் தாரது வீட்டுப் பெண் என்ற நினைவினால் செருக்கடைந்து அவனை அசட்டை செய்தவளாய்க் காணப்படாமல் ஒரு குருவிடம் பணிவாகக் கல்வி கற்றுக் கொள்ளும் சீஷனைப் போல பயபக்தியோடு ஒழுகி, அவனது வாக்குக்கு எதிர்வாக்கின்றி வித்தை கற்று வந்தாள்.

இவர்கள் இங்ஙனம் இருக்க, அந்த மாளிகையின் மேன் மாடியில் கொலு மண்டபத்தைப் போல அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு விடுதியில் அதே காலத்தில் இரண்டு யெளவனப் புருஷர்கள் சம்பாஷித்துக் கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவன் கண்மணி யம்மாளின் தமயனான துரைராஜா என்பவன். அவனுக்கு இருபத்து மூன்று வயதிருக்கலாம். அவன் உயர்வான சிவந்த அழகிய மேனியைக் கொண்டவன். அவனோடு இருந்த மற்றவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/22&oldid=649668" இலிருந்து மீள்விக்கப்பட்டது