பக்கம்:மதன கல்யாணி-1.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மதன கல்யாணி

இன்னின்ன இடத்தில் இன்னின்ன திருவிளையாடல்கள் நடக் கின்றன என்பது அவனுக்கு மனப்பாடம்; அவனுடன் இருந்தால் தானும் அவனைப் போலவே தேர்ச்சி அடையலாம் என்பது மைனரது கருத்து. இவ்வாறு அவ்விரு துர்த்த சிகாமணிகளும் ஒருவரை ஒருவர் துணையாகப் பற்றிக் கொண்டிருந்தனர்.

அவ்விருவரும் முதல் நாள் இரவில், வி.பி. ஹாலில் நடந்த நாடகம் (Drama) பார்த்தவர் ஆதலின், அன்றைய பகலில் பன்னிரண்டு மணிக்கெழுந்து போஜனம் முடித்துக் கொண்டு படுத்தவர்கள் சற்று முன்னர்ே எழுந்து சிற்றுண்டி அருந்தி கையில் சிகரெட்டைப் பிடித்துக் கொண்டு சீட்டாட உட்கார்ந்தனர். முதல் நாள் இரவில் பார்த்த நாடகக் காட்சிகளே அவர்களது அகக் கண்ணில் அப்போது வந்து கொண்டிருந்தன. இன்பகரமான அந்த நினைவுகளிலேயே அவர்கள் ஈடுபட்டிருந்தமையால், அதைப் பற்றியே பேசத் தொடங்கினர். அப்போது மைசூரில் இருந்து பாலிகா மனமோகன நாடகக் கம்பெனி என்ற பெயருடைய ஒரு கூட்டத்தார் சென்னைக்கு வந்து, சில தினங்களாக வி.பி. ஹால் என்னும் கட்டிடத்தில் ஆடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கம்பெனியின் சொந்தக்காரர் ஆண் பிள்ளை ஆனாலும், அதில் தோன்றி நடித்தோர் யாவரும் பெண்பாலராகவே இருந்தனர். அவர்கள் யாவரும் நன்றாகப் படித்தவர்கள்: 8-வயது முதல் 25-வயதுக்கு மேல்படாத யெளவனப் பருவமும் ஒருவரைப் போல் எல்லோரும் கந்தருவ ஸ்திரீகளைப் போலத் தேர்ந்தெடுக்கப் பட்ட கண்கொள்ளா வனப்பு வாய்ந்த மனமோகன சுந்தர ரூபிணிகள். அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் வேஷங்களைத் தத்ரூபமாகத் திறமையோடு நடித்ததன்றி ஒவ்வொருவரும் பார்சீ நாட்டியம், இங்கிலீஷ் டான்ஸ், பரத நாட்டியம் முதலியவற்றிலும் அற்புதமாகப் பயிற்றப் பட்டிருந்தனர். ஒவ்வொருவரும் தனித்தனி யாக நாட்டியம் ஆடினாலும், பலர் ஒன்றுகூடி நாட்டியம் ஆடினாலும், எவ்வகை யாலும் அந்த நடனம் மெச்சத் தகுந்த தாகவே இருந்தது. அவர்கள் சென்னைக்கு வந்த சொற்ப காலத்திற்குள் எத்தனையோ தங்கப் பதக்கங்களும் வேறுவிதமான பரிசுகளும் பெற்றுவிட்டதன்றி, நாடகம் பார்க்கச் சென்றோரின் மனதை மயக்கி அவர்கள் இரவு பகல் அதே நினைவைக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/24&oldid=649708" இலிருந்து மீள்விக்கப்பட்டது