பக்கம்:மதன கல்யாணி-1.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார், 247

களையும் புரசைப்பாக்கத்தில் வைத்திருக்கிறார். இந்த அம்மாள் வேறே துணையில்லாமல் ஏகாங்கியாக இருப்பதால், இவர்களுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் அவரே செய்து வருகிறார். அவர்

தான் எங்களை அனுப்பியது.

சிவஞான:- ஒகோ அப்படியா அவர் இந்த பங்களாவுக்கு எப்போதாவது வருவதுண்டா?

அந்த மனிதன்:- பகல் வேளைகளில் வந்து ஆக வேண்டிய சங்கதிகளைப் பேசிவிட்டுப் போய்விடுவார்.

சிவஞான:- இந்த நாடகத்தில் ஆடும் பெண் பிள்ளைகள் எல்லோரும் ஒருவருக்கொருவர் சொந்தக்காரர்களா? சொந்தம் இல்லாதவர்களா?

அந்த மனிதன்:- சொந்தக்காரர்கள் அல்ல. இதில் பல ஜாதியைச் சேர்ந்த பெண்களும் இருக்கிறார்கள்; பிராமணப் பெண்கள் இருக்கிறார்கள்; நாயுடு ஜாதிப் பெண்கள் இருக்கிறார்கள்; முதலியார் ஜாதிப் பெண்கள் இருக்கிறார்கள்; தாசி பெண்கள் இருக்கிறார்கள். எல்லா ஜாதிப் பெண்களும் இருக்கிறார்கள்.

சிவஞான:- (நயமாக) இந்த அம்மாள் எந்த ஜாதியைச் சேர்ந்த வர்கள் என்பது உனக்குத் தெரியுமா?

அந்த மனிதன்:- தெரியும்; இந்த அம்மாள் ஒரு முதலியார் வீட்டுப் பெண்ணாம்.

சிவஞான:- இந்த அம்மாளுடைய தாய் தகப்பன்மார் எல்லோரும் எங்கே இருக்கிறார்கள் தெரியுமா?

அந்த மனிதன்:- இரண்டு பேரும் இந்த அம்மாளுடைய சிறு வயதிலேயே இறந்து போய் விட்டார்களாம். யாரோ பாத்தியஸ்தர் வளர்த்துப் படிக்க வைத்தார்களாம்; பள்ளிக்கூடத்தில் இருந்த படியே, எஜமான் இவர்களை இந்த நாடகத்தில் சேர்த்துக்

கொண்டார்கள் - என்றான்.

சிவஞான:- இந்த அம்மாளுக்கு மாசம் எத்தனை ரூபாய்

சம்பளம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/265&oldid=649764" இலிருந்து மீள்விக்கப்பட்டது