பக்கம்:மதன கல்யாணி-1.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 மதன கல்யாணி

அதைக் கேட்ட சிவஞான முதலியார் சிறிது யோசனை செய்தவராய், “அந்த விவரத்தை அவர்களிடத்தில் நேரிலேயே சொல்லிக் கொள்ளலாம் என்று உத்தேசித்தேன். இருந்தாலும் பாதகமில்லை. தேனாம்பேட்டையில் இருந்து ஒரு ஜெமீந்தாரிணி யம்மாளும், மைலாப்பூரில் இருந்து ஒரு வக்கீல் ஐயாவும் வந்திருப் பதாகத் தெரிவி; அதுவே போதும். அவர்கள் தெரிந்து கொள்ளுவார்கள்” என்றார். அந்த மனிதன் அவர் சொன்ன விவரத்தைக் கேட்டுக் கொண்டு, மறுபடியும் உள்ளே ஓடினான். அவன் அவ்வாறு சென்ற பின் இரண்டொரு நிமிஷ நேரம் கழிந்தது. சிவஞான முதலியார், உட்புறத்தில் லாந்தரோடு நின்று கொண்டிருந்த மனிதனை நோக்கி, “ஏனப்பா இப்போது உள்ளே அம்மாள் மாத்திரம் இருக்கிறார்களா? அல்லது, அவர்களுடைய பந்துக்கள் யாராகிலும் கூட இருக்கிறார்களா?” என்று சந்தேகத் திற்கு இடமின்றி அலட்சியமாகக் கேட்டார். அதைக் கேட்ட அந்த மனிதன் “அம்மாள் மாத்திரம் தான் இருக்கிறார்கள். துணைக்காக, நாங்கள் ஆண்பிள்ளைகள் நான்கு பேரும் பெண்பிள்ளைகள் மூன்று பேரும் இருக்கிறோம்” என்றான்.

சிவஞான முதலியார், “நேற்று கொள்ளை நடந்த போது நீயும் இங்கே இருந்தாயோ?” என்றார். அந்த மனிதன், “இல்லை இல்லை. நாங்கள் எழு பேரும் புரசைப்பாக்கத்தில் இருந்து இன்று காலையிலே தான் வந்தோம். இதற்கு முன் வேறே மூன்று ஆண் பிள்ளைகளும், மூன்று பெண் பிள்ளைகளும் இருந்தார்கள். நேற்றைய கொள்ளையில் மூன்று ஆண்பிள்ளைகளும் இறந்து போய்விட்டார்கள். மூன்று பெண் பிள்ளைகளும் அடிபட்டு வைத்திய சாலையில் கிடக்கிறார்கள். இங்கே ஒரு ஆள் கூட இல்லை என்று எஜமான் எங்கள் ஏழு பேரையும் துணைக்காக இங்கே அனுப்பினார்” என்றான்.

சிவஞான. எஜமான் அனுப்பியதாகச் சொல்லுகிறாயே, அவர் யார்? இந்த அம்மாளுடைய புருஷனோ?

அந்த மனிதன் இல்லை இல்லை. இந்த அம்மாளுக்கு இன்னம் கலியாணமே ஆகவில்லை. இவர்கள் நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் நாடகத்தின் சொந்தக்காரர், மற்ற எல்லா வேஷக்காரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/264&oldid=649762" இலிருந்து மீள்விக்கப்பட்டது