பக்கம்:மதன கல்யாணி-1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 மதன கல்யாணி

கொண்டு, அவனை தாம் எளிதில் தப்ப வைத்து விடலாம் என்ற ஒரு வகையான தைரியத்தை அடைந்தவராய், இதில் வந்துள்ள விவரம் எப்படியாவது இருக்கட்டும். இங்கே நேற்று இரவில் நடந்த உண்மையான வரலாற்றை நீ எங்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

அதைக் கேட்ட பாலாம்பாள், “இதில் வந்திருக்கும் விவரம் சரியானது தான். நான் கொஞ்ச நேரத்துக்கு முன் சொன்னபடி, களவு போன பொருள் எவ்வளவு என்பது மாத்திரம் சரியாகப் போடப்படவில்லை. மற்ற விவரம் எல்லாம், நடந்தபடியே தான் போடப்பட்டிருக்கிறது” என்றாள்.

சிவஞான முதலியார் புன்சிரிப்போடு, “திருட்டின் விவரம் அல்லவா இதில் இருக்கிறது. நான் கேட்பது, உனக்கும் அந்தப் பையனுக்கும் இரண்டு நாட்களாக ஏதோ தகராறு ஏற்பட்ட தென்பது தெரிகிறதே; அவன் விவரத்தைக் கேட்க எங்களுக்கு விருப்பமாக இருக்கிறது” என்று நயமாக கூறினார்.

அதைக் கேட்ட பாலாம்பாள் சிறிது தயங்கி, “தாங்கள் அந்தப் பையனுடைய வக்கீல் போலிருக்கிறது. நான் அறியாத பெண் பிள்ளை; என்னிடம் தாங்கள் இந்த விவரங்களை எல்லாம் இப்போது கேட்டுக்கொண்டு போய், நாளைய தினம் கச்சேரியில் வந்து தாறுமாறகக் கேள்விகள் கேட்டு என்னை அழவைத்து விடுவீர்களோ என்னவோ! அது தான் பயமாக இருக்கிறது. முதலில் எனக்கு ஒரு விஷயம் தெரிய வேண்டும். தங்கள் இருவருக்கும் அந்தப் பையனுக்கும் என்ன சம்பந்தம் என்பதை யும் என்னிடம் தாங்கள் என்ன காரியமாக வந்தீர்கள் என்பதையும் தெளிவாகச் சொன்னால், அதன்மேல், நான் உண்மையான விவரங்களை உள்ளபடியே சொல்லிவிடுகிறேன். தாங்கள் எதிர்க்கட்சி வக்கீலாக இருந்தால், நான் இந்த விவரத்தையும் போலீஸாரைக் கேட்ட பிறகு தான் சொல்ல முடியும். நான் இப்படிச் சொல்வதைப்பற்றி தாங்கள் வருத்தப்படக்கூடாது” என்று மிகவும் நயமாக மறுமொழி கூறினாள்.

சிவஞான முதலியார்:- நான் வக்கீல் என்பது உண்மை தான். ஆனால், உன்னுடைய ரகசியங்களை எல்லாம் கிரகித்துக் கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/278&oldid=649790" இலிருந்து மீள்விக்கப்பட்டது