பக்கம்:மதன கல்யாணி-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 13

விஷயங்களில் நான் நன்றாகப் பழக்கி வைத்திருக்கிறேன். இன்றைய ராத்திரி அவனை விட்டால், அவள் எமலோகத்துக்குப் போனாலும் அவன் கூடவே போய் இடத்தைப் பார்த்துக் கொண்டு வந்துவிடுவான். அது போகட்டும். இடம் தெரிந்ததாக வைத்துக் கொள்வோம். அதன் பிறகு அவளிடம் எப்படி நெருங்கு கிறது? அவளோடு கூடவே ஒரு கிழவி இருக்கிறாளாம்; யார் வந்தாலும் அவள் வேட்டை நாய் போல மேலே விழுந்து கடித்து அனுப்பி விடுகிறாளாம்; தபால் மூலமாக கடிதம் அனுப்பினால், அதை உடைக்காமலே நெருப்பில் போட்டு விடுகிறாளாம். நமக்கு முன் தப்பிலி சமஸ்தானத்து மகாராஜா எவ்வளவோ பாடுபட்டு அவமானம் அடைந்து விட்டார். எருமைநாதபுரம் மகாராஜா ஆயிரம் ரூபாய் நோட்டை கடிதத்தில் வைத்து அனுப்பினாராம். அந்த நோட்டையும் நெருப்பில் போட்டுக் கரியாக்கி விட்டாளாமே. அப்படிப்பட்ட பகட்டுக்காரியிடத்தில் நாம் எப்படி நெருங்குகிறது.

மைனர்:- (சிறிது ஆழ்ந்து யோசனை செய்து) முதலில் அவளுடைய இடத்தைக் கண்டுபிடிப்போம். அதன் பிறகு எப்படி யாவது தந்திரம் செய்து, அவள் வீட்டில் உள்ள வேலைக்காரி, சமையற்காரி முதலிய எவளையாகிலும் பிடித்து, அவர்களுக்குச் சரியானபடி பணம் இளக்கினால், அவர்கள் தங்களுடைய எஜமானியை நம் வலையில் எப்படி வீழ்த்துகிறது என்பதற்கு ஏதாவது வழி காட்டுவார்கள். அதன்படி நாம் செய்வோம்; இன்றைக்கு பொன்னம்பலம் தவறாமல் இடத்தை மாத்திரம் கண்டு பிடித்து விட்டால், நான் பிச்சைக்காரனைப் போலாவது, அல்லது, ஏதாவது பழம், புஷ்பம் முதலிய பொட்டைச்சி சாமான் விற்பவன் போலவாகிலும் வேஷம் போட்டுக் கொண்டு, அவள் இருக்கும் இடத்துக்குள் நுழைந்து துப்பு அறிந்து வருகிறேன். அதன் மேல் நாம் யோசனை செய்து காரியத்தை முடிப்போம் - என்றான்.

அதைக் கேட்ட துரைராஜா மகிழ்ச்சி அடைந்தவனாய், “பலே! மாப்பிள்ளைக்குத் தெரியாத யோசனைக்கு நான் என்ன சொல்லப் போகிறேன். அப்படியே செய்வோம்” என்று கூறிய வண்ணம் தவசிப்பிள்ளை பொன்னம்பலத்தை அழைத்து, அன்றிரவில் அவன் செய்ய வேண்டிய காரியத்தை அவனுக்குத் தெரிவித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/31&oldid=649854" இலிருந்து மீள்விக்கப்பட்டது