பக்கம்:மதன கல்யாணி-1.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 303

பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு மகோன்னத தசையில் இருந்து சுகப்பட வேண்டும். அவன் கூத்தியிடம் போனான் என்றும், குடித்தான் என்றும் அவனை எவர்களாவது தூவிக்க முடியுமா! அப்படிப்பட்ட கெட்ட காரியங்களை அவன் உண்மையிலேயே செய்திருந்தாலும், அதனால், அவனுக்கு ஏதாவது இழிவு ஏற்படுமா! உலகத்தார் அவனை அவமதிக்க முடியுமா குப்பையில் விழுந்தாலும் மாணிக்கம் மாணிக்கந்தானே. இப்போது பார்த்துக் கொண்டாயல்லவா வித்தியாசத்தை! மாரமங்கலம் மைனர் எத்தனையோ துன்மார்க்கமான காரியங்களைச் செய்து வருகிறான் என்று நீ இவ்வளவு காலமாகச் சொல்லி வந்திருக்கிறாயே! அவன் அப்படி நடப்பதால், அவனுக்கு ஏதாகிலும் இழிவு ஏற்பட்ட துண்டா? அவனை யாராவது தங்களோடு பழக யோக்கியதை இல்லாதவன் என்று விலக்குகிறார்களா? இந்த மதனகோபா லனைப் பார்; அவன் செய்த காரியத்தை அறிந்தவுடனே, கேவலமான ஒரு நாயை அடித்து ஒட்டுவதைப் போல எல்லோரும் அவனை விலக்கி தங்களுடைய வீடுகளுக்குள் அவன் நுழையக் கூடாதென்று கண்டித்துவிட்டார்கள். பிச்சைக் காரனுக்கும் மகாராஜனுக்கும் உள்ள தாரதம்மியம் இன்னதென்பது இப்போதாவது உனக்குத் தெரிகிறதா? அசடே! போ. இனிமே லாவது இந்தப் பைத்தியத்தை விட்டுவிடு. நாளைய தினம் இரவில் உனக்கும் மைனருக்கும் நிச்சயதாம்பூல முகூர்த்தம் ஜாம் ஜாம் என்று நடக்கப் போகிறது. பெருத்த சமஸ்தானத்துக்கே நீ ஒரு மகா ராணியைப் போல இருந்து சகலமான சுகபோகங்களையும் அனுபவிக்கப் போகிறாய். நான் என்ன இன்றைக்கோ நாளைக்கோ சாகப் போகிற கிழவி. எனக்காகவா நான் இந்த ஏற்பாட்டை எல்லாம் செய்கிறேன்? உன்னுடைய நிரந்தரமான நன்மையையும் பெருமையையும் கருதியே, நான் இந்த ஏற்பாட்டைச் செய்திருக் கிறேன். மகோன்னத பதவியில் இருந்து சுகமடைந்து அமோகமாக வாழ வேண்டிய நீ, நாளைய தினம் முகூர்த்தம் என்றால், அதைப் பற்றிக் குதூகலமாகப் பொங்கிப் பூரித்திருக்க வேண்டிய போது, அபசகுனமாக இப்படி அழுது கொண்டிருக்கிறாயே! உன்னுடைய வயதுக்கும் புத்திக்கும் படிப்புக்கும் இது அழகானதல்ல. போனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/320&oldid=649876" இலிருந்து மீள்விக்கப்பட்டது