பக்கம்:மதன கல்யாணி-1.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 - மதன கல்யாணி

போகட்டும். இனிமேலாவது சந்தோஷமாக இரு நேரமாகிறது, சாப்பிடப் போவோம் வா” என்று மிகவும் அன்பாகக் கூறி அவளை அழைக்க, கண்மணியம்மாள், பாவம்’ என்ன செய்வாள்! மதனகோபாலனைப் பற்றிப் பரிந்து பேசுவதற்கும் வழியில்லை. அன்றி, தன் மனதிலிருந்த ஐயங்களையும், மைனரை மணக்கக் கூடாதென்று தான் கொண்டிருந்த உறுதியையும் வெளியிட்டு, அத்தையின் மனதைப் புண்படுத்தவும் அவள் விரும்பவில்லை. ஆதலால், அவள் தனது மனதை வதைத்து வாட்டிய துன்பங்களையும் துயரத்தையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் பெரும்பாடுபட்டு மறைத்துக் கொண்டு மெளனமாக வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு நல்ல புத்தி வந்து விட்டதென்று நினைத்துக் கொண்ட மீனாகூஜியம்மாள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவளாய் அவளைத் தொடர்ந்து சென்றாள்.

அன்றைய ராப்போஜனம் முடிப்பது கண்மணியம்மாளுக்குப் பெருத்த வாதை ஆகிவிட்டது. அவள் தனது மனதில் விசனமாகிய ஒரு பெருத்த குன்றை மறைத்து வைத்துக் கொண்டு அத்தையின் தாட்சணியத்திற்காக போஜனம் செய்ததாக நடிக்க நேர்ந்தது ஆகையால், அவளது உச்சி முதல் உள்ளங்கால் வரையில் அடிக்கடி நடுங்கியது. இரண்டொரு வாய் கவளம் எடுத்து வாயில் போடும் முன் குமட்டல் உண்டாயிற்று. மீனாகூஜியம்மாள் இடை யிடையில் மதனகோபாலனைப் பற்றி இழிவாகப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் புண்ணில் மிளகாய் விழுதை அப்பியது போல சகிக்க ஒண்ணாத வேதனை உண்டாக்கியது. அப்படி இருந்தும், கண்மணியம்மாள் தனது வாயைத் திறந்தே பேசாமல் போஜனம் முடித்ததாகப் பேர் பண்ணிக் கொண்டு திரும்பவும் தனது படுக்கையை அடைந்தாள். கல்யாணியம்மாளது சுடு மொழிகளினின்று தப்பி வந்தது, அவளுக்கு ஒரு பெருத்த துன்ப நிவர்த்தியாக இருந்தது ஆனாலும் அவளது பழைய நினைவுகள் யாவும் முன்னிலும் ஆயிரம் மடங்கு அதிகரித்த உரத்தோடு எழுந்து அவளது மனதை சல்லடைக் கண்களாகத் துளைக்க ஆரம்பித்தன. பரம யோக்கியனான மதனகோபாலன் அப்படியும் செய்திருப்பானோ என்ற வியப்பும் ஐயமுமே எழுந்தெழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/321&oldid=649878" இலிருந்து மீள்விக்கப்பட்டது