பக்கம்:மதன கல்யாணி-1.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 மதன கல் யாணி

தனது உடைகள், கேசம் முதலியவற்றைத் திருத்திக் கொள்பவள் போலத் தனது அத்தையின் முகத்தைப் பார்க்காமல் வேறே பொருட்களைப் பார்த்து சாகசம் செய்து கொண்டிருந்தாள். மீனாகூஜியம்மாள் எவ்வாறு கோபித்துக் கொள்ளுவாளோ, எவ் விதமான சொல்லம்புகளைப் பிரயோகிப்பாளோ என்ற பெரும் பீதியினால் ஒவ்வொரு நொடியும் கண்மணியம்மாளுக்குப் பெருத்த யுகமாக இருந்ததன்றி, அடிவயிற்றில் தீ வைத்தது போல, அவளது தேகமும் மனதும் விவரிக்க இயலாத வகையில் சங்கடப் பட்டுக் கொண்டிருந்தன. அவள் பாசாங்கு செய்கிறாள் என்பதைக் கண்ட மீனாகூஜியம்மாள் வெறுப்பாகவும் விரக்தியாகவும் பேசத் தொடங்கி, “சரி; என்ன செய்கிறது; தலைவிதி எப்படியோ அப் படித்தானே புத்தியும் போகும். முகூர்த்தம் வைத்திருக்கிறது என்று சொன்னால் ஊரில் உள்ள பெண்கள் சந்தோஷப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் இப்படிப்பட்ட அழுமூஞ்சியை நான் பார்த்ததே இல்லை. ஓயாமல் அழுது கொண்டே இருந்தாய் அல்லவா! உன் மனம் போல ஆகிவிட்டது; எதற்காகத் தான் இந்தக் காரியம் இப்படித் தடைபட்டுக் கொண்டு வருகிறதோ தெரியவில்லை” என்று விசனத்தோடு கூறினாள்.

அதற்குள் கண்மணியம்மாள் தனது சேலையைச் சரிப்படுத்திக் கொள்பவள் போலத் தனது இடையை ஆராய்ந்து கடிதம் பத்திரமாக இருந்ததைக் கண்டுகொண்டதன்றி, மீனாகூஜியம்மாளது சொல்லும் அவள் கடிதத்தைப் பார்த்தவள் என்பதைக் காட்டாமல், வேறுவிதமாக ஏற்பட்ட ஏதோ ஒர் இடையூறைக் காட்டியதை உணர்ந்து கொண்டாள். ஆதலால், கண்மணியம்மாள் ஒருவாறு துணிவடைந்து தனது அத்தையிருந்த பக்கமாகத் திரும்பினாள். திரும்பவே, மீனாகூஜியம்மாள் மேலும் இவளை உற்று நோக்கி, “அடாடா முகம் வெளுத்துப் போயிருக்கிறது. கண்னெல்லாம் குழிந்து போயிருக்கிறது. ராத்திரி எல்லாம் நீ தூங்காமலே அழுது கொண்டிருந்தாப் போலிருக்கிறதே! நீ அழ அழ உன்னிடத்தில் மூதேவிதான் வாசம் பண்ணுவாள். நேற்று ராத்திரி நீ அழுததின் பலன் கைமேல் கிடைத்துவிட்டது; இதோ இந்தக் கடிதத்தைப் பார்” என்று கூறிய வண்ணம் தனது கையில் இருந்த ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/325&oldid=649886" இலிருந்து மீள்விக்கப்பட்டது