பக்கம்:மதன கல்யாணி-1.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 309

கடிதத்தைக் கண்மணியின் மேல் கோபத்தோடு வீசி எறிந்தாள். உடனே கண்மணி கீழே குனிந்து அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரிக்க, அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:

மகா-ா-ா-ஸ்ரீ மகாகனம் தங்கிய மீனாகூஜியம்மாள் அவர்களுக்கு அநேக நமஸ்காரம்:

நேற்று இரவு நான் உங்களை உங்களுடைய பங்களாவில் இறக்கி விட்டபின், மைனருடைய போஷகர்களுள் ஒருவரான சிவஞான முதலியார் அவர்களை அழைத்துக் கொண்டு, ஆலந்தூரில் உள்ள அவர்களுடைய நெருங்கிய உறவினரான சிலரை நாளைய முகூர்த்தத்துக்கு அழைத்து விட்டு வரவேண்டும் என்ற கருத்தோடு ஆலந்துருக்குப் போயிருந்தேன்; போய்விட்டுத் திரும்பி வரும்போது நடுவழியில் கொள்ளைக் காரர்கள் எங்களை வளைத்துக் கொண்டு அடித்து எங்களிடம் இருந்த உடைமை களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள். அதன் சம்பந்தமாக, நாங்கள் சைதாப்பேட்டைப் போலீஸ் ஸ்டேஷனுக் குப் போயிருந்து, அவர்களுக்கு வேண்டிய வாக்குமூலங்களை எல்லாம் கொடுத்துவிட்டு இன்று காலை ஏழுமணரிக்குத் தான் பங்களாவுக்கு வந்து சேர்ந்தோம். நேற்று ராத்திரி முழுதும் கண் விழித்ததாலும், திருடர்களிடம் உபத்திரவப் பட்டதாலும் நான் இன்றைய பகல் முழுதும் எழுந்திருக்க சாத்தியப் படாதென்று நினைக்கிறேன். இன்றைய ராத்திரி நடத்த நாம் உத்தேசித்துள்ள விருந்திற்கும் முகூர்த்தத்திற்கும் ஆகவேண்டிய எத்தனையோ ஏற்பாடுகளில் ஒன்றுகூட இன்னமும் செய்யப்படவில்லை. நாம் குறித்துள்ள காலத்திற்குள் சகல காரியங்களும் முடிவது துர்லபமாக இருக்கும் ஆதலால், இன்றைக்கும் நாளைக்கும் பொறுத்து, மூன்றாம் நாள் ராத்திரி இந்த விருந்தையும் முகூர்த்தத்தையும் நடத்தி வைக்கத் தீர்மானித்திருக்கிறேன். நேற்று நாம் அழைத்து விட்டு வந்த ஜனங்களுக்கும் இந்தச் சங்கதியை சொல்லி அனுப்பி விட்டேன்.

ஆகையால், எதிர்பாராத காரணங்களால் ஏற்பட்ட இந்த இடையூறைக் குறித்து வருத்தப்படாமல், தயவு செய்து இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/326&oldid=649888" இலிருந்து மீள்விக்கப்பட்டது