பக்கம்:மதன கல்யாணி-1.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 311

தனிமையில் விடப்பட்ட கண்மணியம்மாள் அப்போதே சரியான மூச்சுவிடத் தொடங்கி, தான் நினைத்திருந்த காரியத்தை மீனாகூஜியம்மாள் திரும்பி வருவதற்குள் முடித்துவிட எண்ணி னாள். அவள் உடனே தனது சயன அறைக்குப் போய், மறைவாக உட்கார்ந்து, தனது மடியிலிருந்த கடிதத்தை எடுத்து அதில் சில திருத்தங்களைச் செய்யத் தொடங்கினாள். மதனகோபாலனது மேல்விலாசம், அவளது சங்கீத நோட்டுப் புஸ்தகத்தில் அவனால் எழுதப்பட்டிருந்ததை அவள் முன்னாகவே பார்த்திருந்தாள் ஆதலால், அந்தக் கடிதத்தை தங்களது பங்களாவின் வேலைக் காரிகளுள் ஒருத்தியிடம் கொடுத்து, மதனகோபாலனது இருப்பிடத்தில் கொண்டு போய் அதைச் சேர்த்துவிட வேண்டும் என்று, அவள் முதலில் எண்ணி இருந்தாள். அதைத் தபாலில் அனுப்பினால், அன்றைய மாலைக்குள் அது அவனிடம் போய்ச் சேருமோ சேராதோ என்ற சந்தேகத்தினால், அவள் தனது வேலைக்காரியை நம்பி அந்த ரகசியமான வேலையை, அவளிடம் ஒப்புவிக்க எண்ணியிருந்தாள். அந்த வேலைக்காரி ஒருவேளை அந்தக் கடிதத்தை தனது அத்தையிடத்திலாவது துரைராஜாவிடத்தி லாவது கொடுத்து விடுவாளோ, அல்லது, தான் மதனகோபாலனுக் குக் கடிதம் கொண்டு போய்க் கொடுத்ததாக அவர்களிடம் சொல்லி 9@GET என்ற அச்சமும் கவலையும் அவளது மனத்தில் இருந்தன. ஆனாலும், வேறே வழி இல்லாமையால், அவளையே நம்பி அதை அனுப்ப வேண்டும் என்று நினைத்திருந்தாள். ஆனால், கல்யாணியம்மாளது கடிதம் கிடைத்த பிறகோ, அந்த எண்ணம் மாறிவிட்டது. ஏனெனில், நிச்சயதாம்பூல முகூர்த்தம் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுப் போனது ஆகையால், அதற்குள் மதனகோபாலனிடம் சேர்ந்துவிடும்படி, தான் அதைத் தபால் மூலமாக அனுப்பிவிடலாம் என்று தீர்மானித்துக் கொண்டாள். அன்று பகலில் கடிதம் தபால் போடப்பட்டால், அது மறுநாளே அவனிடம் போகும். அவன் ஒருகால் ஊரில் இல்லாமல் இருந்து அவன் மறுநாள் வரமுடியாமல் போனாலும் போகலாம். ஆகையால், மூன்றாவது நாளாகிய நிச்சயதாம்பூல முகூர்த்த தினத்தன்று மாலை ஏழரைக்கு மேல் எட்டுக்குள் ஆலமரத்தடிக்கு வந்து சேரும்படி எழுதினால், அவன் தவறாமல் வரவும், தானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/328&oldid=649891" இலிருந்து மீள்விக்கப்பட்டது