பக்கம்:மதன கல்யாணி-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மதன கல்யாணி

பருவம் நீங்குகிற வரையில் கல்யாணியம்மாளும், சென்னையில் உள்ள அவரது நண்பர்களான வக்கீல் சிவஞான முதலியார், சோமநாதபுரம் ஜெமீந்தார் ஆகிய வேறு இருவரும் மைனருக்குப் போஷகராக இருந்து காரியங்களை நடத்த வேண்டும் என்ற விவரமும் வேறு பலவகையான விவரங்களும் அதில் எழுதப் பட்டிருந்தன. சென்னையில் இருந்த போஷகர்கள் இருவரும் அடிக்கடி மாரமங்கலம் போவதில்லை ஆதலால், கல்யாணியம் மாளே சகலமான அதிகாரத்தையும் நடத்தி வந்தாள். ஜெமீந்தாரது தகன தினத்திற்கு மறுநாட் காலையில் ஒரு விபரீதமான செய்தி பரவியது; அரண்மனைத் தோட்டத்தின் ஒரு மூலையில் இருந்த மரம் ஒன்றில் கட்டப்பட்ட ஒரு மணிக்கயிற்றில் சுருக்கிட்டுக் கொண்டு சின்னதுரை தற்கொலை செய்து கொண்டு பினமாகத் தொங்குகிறான் என்ற பயங்கரமான சமாசாரம் தெரிந்தது. ஒழிந்தான் கொலைகாரன் என்று ஜனங்கள் யாவரும் வாழ்த்துப் பாடினர். போலீசாரும் மற்றவரும் பிணத்தை எடுத்து, அவன் தானாகவே தற்கொலை செய்து கொண்டிருந்தான் என்று மகஜர் எழுதிய பிறகு பிணம் கொளுத்தப்பட்டது. அன்றோடே கல்யாணி அம்மாளது கவலையும் அச்சமும் ஒழிந்தன. அவள் தனது மூன்று குழந்தைகளோடு மிகவும் சந்தோஷமாகக் காலங்கழிக்கத் தொடங்கி, மகோன்னத தசையில் இருந்து, பொருட்களை எல்லாம் ஆண்டு அனுபவிக்கத் தொடங்கினாள். அவள் சென்னையில் இருந்த தங்களது பங்களாவில் சில மாதங்களும், மாரமங்கலம் அரண் மனையில் சில மாதங்களுமாக மாறிமாறி இருந்து சகலமான சுகபோகங்களுடன் தனது குழந்தைகளை வளர்த்து வந்தாள். அவ்வாறு பதினான்கு வருஷங்கள் சென்றன. குழந்தைகள் மூன்றும் யெளவனப் பருவம் அடைந்தன. அவர்களில் மூத்தவனே இந்தக் கதையின் தொடக்கத்தில் மாரமங்கலம் மைனர் என்று குறிக்கப்பட்டவன். அவன் துரைராஜாவின் நட்பினால் சகல விதமான துர்க்குணங்களையும் கற்று, தனது தாயான கல்யாணி அம்மாளின் சொல்லிற்குக் கீழ்ப்படியாத துஷ்டனாய் மாறி துன் மார்க்கங்களிலேயே சென்று கொண்டிருந்தான்.

அவன் மோகனாங்கியினிடம் சிநேகம் செய்து கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்தோடு ஆலந்துரை அடைந்து அம்பட்டக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/68&oldid=649969" இலிருந்து மீள்விக்கப்பட்டது