பக்கம்:மதன கல்யாணி-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 57

மனிதர்களை ஒன்றாக நியமிக்கப் போகிறாராம்; அதில் நம்முடைய சோமபுரம் ஜெமீந்தாருக்கும் ஒரு ஸ்தானம் கிடைத்திருக்கிறதாம். அவர் உனக்கு அதில் கீழ் உத்தியோகங்களில் ஒரு கெளரவ உத்தியோகம் சம்பாதித்துக் கொடுத்து, உன்னையும் தம்முடன் கூட அழைத்தக் கொண்டு போக விரும்புகிறார். வட இந்தியாவில் உள்ள மகாராஜாக்களின் சமஸ்தானங்களுக்கெல்லாம் நீ போய்ப் பார்த்தால் உனக்கு உலக அனுபவம் ஏற்படும் என்று அவர் சொல்லுகிறார். ஆகையால் நீ அவரோடு போய்விட்டு வந்து சேர். அதற்குள் கலியான காலமும் வந்து விடும்” என்றாள்.

மைனர். (குறும்பாக) என்னுடைய கலியான காலம் இப்போது வரமாட்டேன் என்கிறதோ? இதே நிமிஷத்தில் கலியாணம் செய்து கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பெண்ணும் சலாம் போட்டுக் கொண்டு கலியாணத்தை ஏற்றுக் கொள்ளும். அதைவிட்டு மூக்கை நேராய்ப் பிடிக்காமல், தலையைச் சுற்றி பிடிக்கிறது போல், நான் ஊரை விட்டு ஒரு வருஷத்துக்குத் திண்டாட வேண்டுமோ? நான் போகவே மாட்டேன். - -

கல்யாணி:- உன்னுடைய தகப்பனார் மரண சாசனத்தில் எழுதி இருக்கிறபடி கலியாணம் செய்கிறதா, அல்லது, நீ நினைத்தபடி செய்கிறதா?

மைனர்:- ஐயர் வருகிற வரையில் அமாவாசை காத்திருக்குமோ? என் தகப்பனார் அறுபது வயசில் கலியாணம் செய்து கொண்டால், நானும் அப்படியே செய்து கொள்ள வேண்டுமோ? அது முடியாது. ஒன்று இப்போது கலியாணம் செய்து வையுங்கள்; இல்லாவிட்டால், கலியாணம் ஆகிறவரையில் என்னை இங்கேயே விட்டு வையுங்கள். நான் வேறே எந்த ஊருக்கும் போக மாட்டடேன்.

கல்யாணி:- சே எவ்வளவு எடுப்பான பேச்சு எவ்வளவு துடுக்கு! தம்பி நீ இப்படி இருப்பாய் என்று நான் நினைக்கவே இல்லை. நீ போக மாட்டேன் என்றால், துரைத்தனத்தார் உன்னைக் கட்டாயப்படுத்திக் கொண்டு போவார்கள்.

மைனர்:- அப்படியே ஆகட்டும்; பார்க்கலாம் ஒரு கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/75&oldid=649986" இலிருந்து மீள்விக்கப்பட்டது