பக்கம்:மதன கல்யாணி-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 மதன கல்யாணி

மைனர்:- ஒருநாளும் இல்லை. அவளுக்கு என்மேல் எவ்வளவு பிரியம் தெரியுமா? அவள் எனக்காக உயிரைக் கூடக் கொடுத்து விடுவாளே அதுவுமன்றி, அவளுக்குச் சொத்துமில்லை; ஒன்று மில்லை. இவ்வளவு பெரிய சமஸ்தானத்துக்கு எஜமானியாவதை எவளாகிலும் வேண்டாம் என்பாளோ?

கல்யாணி:- சரி; அப்படியே இருக்கட்டும். நான் எதற்காக உன்னை வரவழைத்தேன் என்பதைச் சொல்லுகிறேன் கேள். உன்னுடைய போஷகர்களான சிவஞான முதலியாரும், சோமநாத புரம் ஜெமீந்தாரும் நேற்று என்னிடம் வந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். மனிதர்களுடைய புத்தியைக் கெடுக்கக்கூடிய சில விஷயங்கள் நிறைந்த இந்தப் பட்டணத்தில் நான் இருப்பது தவறென்றும், அதனால் குழந்தைகள் கெட்டுப் போக சந்தர்ப்பம் உண்டாகிறது என்றும் அவர்கள் சொன்னதன்றி, எல்லோரையும் அழைத்துக் கொண்டு மாரமங்கலத்துக்கு உடனே போவது நல்லது என்று சொல்லுகிறார்கள். ஆகையால் நான் அப்படியே செய்யத் தீர்மானித்து விட்டேன். உன்னுடைய கலியான காலம் வரையில் நாம் அவ்விடத்திலேயே இருக்க வேண்டும். ஆகையால், நீயும் புறப்படத் தயாராக இருக்க வேண்டும். அதைச் சொல்லவே நான் உன்னை அழைத்தேன் - என்றாள்.

மைனர்:- (ஆத்திரத்தோடு சோடாவை விட்டெழுந்த வண்ணம்) பலே பேஷ்! நீங்கள் எல்லோரும் போங்கள். என் உயிர் போனாலும் நான் அந்தப் பட்டிக்காட்டுக்கு வரமாட்டேன். அங்கே எனக்கு ஒரு நிமிஷங்கூடப் பொழுது போகாது - என்றான்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் கோபத்தோடு நிமிர்ந்து உறுதியான குரலில் “அப்படியானால் நாங்கள் போகிறோம். நீ இன்னொன்று செய்; நம்முடைய சோமநாதபுரம் ஜெமீந்தார் வக்கீல் பரிட்சையில் தேறியவர் என்பதும் சட்டத்தில் நல்ல அனுபோகம் உள்ளவர் என்பதும் உனக்குத் தெரியும். அவருக்கும் இந்த ராஜதானியின் கவர்னருக்கும் அன்னியோன்னியமான சிநேகம் உண்டு; பம்பாய், கல்கத்தா, மத்திய மாகாணம் முதலிய ராஜதானிகளில் ஜெயில் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி விசாரணை செய்வதற்காக கவர்னர், ஏழெட்டுப் பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/74&oldid=649984" இலிருந்து மீள்விக்கப்பட்டது