பக்கம்:மனை ஆட்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7

 7 அ.அம்மா, இந்த ரெண்டு நாளா எனக்கு சாப்பாட்டுக்கு ஒண்ணுமில்லெ அம்மா எம்புருஷனுக்கு இன்னம் சம்பளம் வரலெ, வூட்லெ தம்மாந்துண்டு அரிசு கூட கெடயாது.

பா.என்ன வேண்டும் உனக்கு ?

அ.அம்மா இஷ்டப்பட்டுக் கொடுக்கிறது.

பா.(பையைத்திறந்து, ஐந்து ரூபாய் அவளிடம்கொடுத்து) இதை இப்போதைக்கு வைத்துக்கொள் ; அப்புறம் ஞாபகம் வைத்துக் கொண்டிருந்து நீ வேண்டியதை யெல்லாம் கொடுக்கிறேன்.

அ.அம்மா தயவு.


பா.அதிருக்கட்டும் அம்மாயி, உன் புருஷன் தன் சம்ப ளத்தையெல்லாம் உன்னிடம் கொடுக்கிறானா அல்லது தினம் செலவுக்காக அவனிடம் நீ கெஞ்ச வேண்டி யிருக்கிறதா ?


அ.ஹாம்! அவன் சம்பளத்தெ அவன் கிட்டவெ வைச்சிக்க அவனுக்கு அவ்வளவு தைரியம் இருக்குதா? மாசம் வர்ர பதினஞ்சி ரூபாயையும் அப்படியெ என் கையிலெ வைச்சுடணும், அப்பறம் அதிலெயிடுத்து, ஒரு ரூபா அவன் சொந்த செலவுக்கு நானா கொடுப் பேன். (போகிறாள்)


பா.பார்த் தாயடி சகுந்தலா நம்முடைய சொந்த வேலைக் காரி அம்மாயியைவிட நான் தாழ்ந்த ஸ்திதியிலே இருக்கும்படி முடிந்தது


ச.அம்மா, அவர்கள் வகுப்பில் பெண்சாதிதான் புரு ஷனைக் கொஞ்சம் ஆளுகிற வழக்கம். கொஞ்சம் பொறுத்துப் பார் ! உன் தகப்பனாரை முற்றிலும் ஆள்கிறேனா இல்லையா என்று! ( கணபதி வருகிறன்.)


க.நேரமாகிறது. நீங்கள் உடனே உள்ளே வராவிட்டால், நீங்கள் ரொம்ப வாஸ்தவமா பட்டினியிருக்க வேண்டி யதுதான். (போகும்போது பார்வதி பாதி எழுதப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/11&oldid=1412985" இலிருந்து மீள்விக்கப்பட்டது