பக்கம்:மனை ஆட்சி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8

 பட்ட ஒருபடம் வைத்திருந்த முக்கோணப் பலகையை கீழே தள்ளி, அதிலிருந்த படத்தைக் கிழித்து விடுகிறாள்)

ச.அம்மா! என்ன காரியம் செய்தீர்கள் ! அப்பா வர்ணம் தீட்டிக் கொண்டிருந்த அந்தபார்சி பெண்பிள்ளையின் படத்தைக் கிழித்து விட்டீர்களே !


பா.அப்படியா செய்தேன் ? ஆனால் மிகவும் சந்தோஷம் ! அது ஸ்வாமியின் வேலை என் வேலையல்ல அதை அங்கேயே அப்படியே விட்டுவிட்டு வந்துவிடு. பயந்து நடுங்கவேண்டிய காலமெல்லாம் போகவே போச்சுது! (அம்மாயி மறுபடி வருகிறாள்.) அம்மா அம்மா எசமான் வர்ராரு (எல்லோரும் பயந்து போகிறார்கள்)

காட்சி முடிகிறது.

இரண்டாம் காட்சி.

இடம்-அதே அறை. காலம்- உடனே

தாமோதர சாஸ்திரி வருகிறார்,


தா.(சுற்றிப்பார்த்து கீழேவிழுந்து கிடக்கும் முக்கோணப் பலகையையும் கிழிந்த படத்தையும் கவனித்து)ஹூம் இவ்வளவுக்கு வந்துவிட்டதா? இது யார் வேலை ?--கணபதி!- கணபதி! எல்லோரும் தூங்கு கிறார்கள் போலிருக்கிறது. (பெருங்கவலையுடன் அங் கிருக்கும் சாய்வு நாற்காலியில் சாய்கிறார் , பிறகு அந்தப் படத்தை மறுபடியும் பார்த்து திடீரென்று எழுத்திருந்து, முக்கோணப் பலகையை சரியாக நிமிர்த்தி, அதில் படத்தை முன்போல் வைத்து, எப்படி கிழிந்திருக்கிறது எவ்வளவு கிழிந்திருக்கிறது, என்ப தைப் பரிசோதித்துப் பார்க்கிறார்) என்ன ஆச்சரியம்! இது அகஸ்மாத்தாய் நடத்திருக்குமா ? அல்லது வேண்டுமென்று யோசனைசெய்து செய்யப்பட்டதோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/12&oldid=1412996" இலிருந்து மீள்விக்கப்பட்டது