பக்கம்:மனை ஆட்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9

 9 அகஸ்மாத்தாய் நேரிட்டதானால், முகம் எங்கு சித்திரிக் கப்பட்டிருந்ததோ, சரியாக அந்த இடத்தில் வேண்டு மென்று கெட்ட எண்ணத்துடன் கிழிக்கப்பட்டது போல் கிழிக்கப்பட் டிருக்குமா ? உம் சரி ?(மறுபடியும் சாய்வு நாற்காலியில் விழுகிறார். சற்று பொறுத்து எழுந்திருந்து, தன் மேல் சட்டையையும் தலைகுட்டையையும் எறிந்துவிட்டு, கவலையுடன் சற்று உலாவி, மறுபடியும் நாற்காலியில் சாய்கிறார்)


தா. இவ்வுலகத்தில உயர்ந்ததும் தாழ்ந்ததும், நல்லதும் பொல்லதும், அழகும் அவலட்சணமும், சதாகாலம் இப்படி போராடுவானேன் ? மனிதனுடைய மனக் கண்ணை மறைத்திருக்கும் இந்தத் திரையை நீக்கி தெய்வம் இப்படி விதித்ததின் காரணத்தை அறிய விரும்பு கிறேன் -கணபதி ! -கணபதி !

(பட்டினியால் களைத்து உயிர் போகும் நிலையில் இருப்பது போல் பாசாங்கு செய்து கொண்டு கணபதி வருகிறான்.)


தா. நான் உன்னைக் கூப்பிட்டது உனக்குக் கேட்கவில் லையா ? நான் என்ன நூறு தரம் கத்த வேண்டுமா ?

க..(மிகுந்த பலஹீனமான மெல்லியகுரலுடன்) நானா கேட்டேன்-எசமான். ஆனாலும், நானா பதில் சொல்ல முடியலெ, சீக்கிரம் வரவும் முடியலெ. நேத்து மொதல் ஒண்னும் சாப்பிடலெ. நானா எப்படி வேலை செய்வது ? எப்படி நடப்பது ?


தா. நீ கூட அந்த கோஷ்டியைச் சேர்ந்து விட்டாயா ? நிச்சயமாய் நான் உன்னையும் கலியாணம் செய்து கொள்ள வில்லையே என்னடாப்பா இந்த விளை யாட்டு ?


க. நான் என்ன செய்வது எசமான்? எனக்கு மாத்திரம் கொஞ்சம் சமையல் செய்து கொள்கிறேன் என்றாலும் விடமாட்டேன் என்கிறார்கள் அவர்கள். என் கையில் இருந்த பணத்தை யெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு, நான் ஏதாவது ஹோட்டலுக்குப் போய் சாப்பிடுவதையும் தடுத்து விட்டார்கள். நேற்றுபகல் ஏதோ சாக்குசொல்லி, மூணாவது வீட்லேபோய் கேட்க, 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/13&oldid=1413296" இலிருந்து மீள்விக்கப்பட்டது