பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

10

தனியார் துறையின் முயற்சிகளின் பேரில் அமைக்கம்பட்டுள்ள இந்த இயக்கத்துக்குப் “போதை மருந்துகளற்ற அமெரிக்காவை உரு வாக்கும் விளம்பர இயக்கம்' என்று பெயரிடப் பட்டுள்ளது. நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படும்.

இந்த இயக்கத்தின் நிர்வாகக் குழு தலைவ ரான ஆலன் ரோசன்ஷைன் இந்த இயக்கத்தைப் பற்றிப் பத்திரிகையாளர்கள் கூட்டமொன்றில் அறிமுகம் செய்து உரை நிகழ்த்தினார்.

'பகுத்தறிவுக்கு உகந்ததல்ல’’

'போதை மருந்துப் பழக்கம் நல்லதல்ல; பகுத்தறிவுக்கு உகந்ததல்ல; கொஞ்சமானாலும் சரி, அதிகமானாலும் சரி, போதை மருந்துப் பழக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடியதே அல்ல; மனிதனின் சராசரி நிலைமைக்கு ஏற்றதல்ல” என்று திருப்பித் திருப்பிப் பிரச்சாரம் செய்வதன் மூலமே இந்த இயக்கத்துக்குப் பயன் படைக்கும் என்று ரோசன்ஷைன் கூறினார்.

'போதை மருந்துப் பழக்கத்தை ஏதோ ஒரே ஒரு விளம்பரத்தினால் மட்டும் கட்டுப் படுத்திவிட முடியாது. இப்பழக்கத்திற்கு எதி ராகச் சமுதாயத்தின் எல்லாப் பிரிவுகளையும் நோக்கி எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு நாளும் தொடர்ந்தாற்போல் பிரச்சாரம் செய்ய வேண்டும்” என்று அவர் சொன்னார்.