பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

2

’பிரிட்டனில் ஒவ்வொரு வ ரு ட் மு. ம், 12500க்கு குறையாத பெண்கள், மதுவால் மரணமடைந்த கணவர்களால் விதவையாக்கப்

படுகின்றார்கள்.”

-டாக்டர் சாலிப்.

துரத்திலே ஆறுமுகம் வந்து கொண்டிருப் பதை அறிந்தும், அவனைப் பார்க்க விரும்பாதவர் போல், பலவேசம் பிள்ளை அருகிலிருந்த தின சரியை முகத்துக்கு நேராகத் தூக்கிப் பிடித்தபடி படித்துக் கொண்டிருந்தார்.

ஆறுமுகம் அமைதியாகச் சிறிது நேரம் எட்ட நின்று கொண்டிருந்தான். பின்னர் பொறுமையை இழந்துவிட்டவனைப் போல், அவரது கவ னத்தைத் திருப்ப, எ ஜ மா ன் கும்பட றேனுங்க’’, என்றான் துண்டைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டபடி.

பலவேசம்பிள்ளையும், அப்போதுதான் அவ னைக் கவனித்தவர் போல், அடே... டே...

யாற்றா...து. ஆறுமுகமா! ஏது இப்படி இவ்வளவு தூரம் காலங் காத்தாலே??’ என்றார்.