பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

27

கொண்டிருக்கும்போது, காவி ஏறிய பற்கள் தாறு மாறாகத் தெரிய ராமன் சிரித்தான்.

'சிரிக்காதேடா. ஆமாம், பட்டைச் சாராயம் காய்ச்சறதிலே தொளப்பன் கில்லாடியாமே?” என்று கேட்டார் பலவேசம் பிள்ளை.

உடனே ராமன் வேகமாக, 'அதுக்கில்லிங்க; வூட்டுலே வெறகில்லேன்னு தான் காட்டுக்குப் போயிருக்கான்', என்று விளக்கம் கொடுத்தான்.

பலவேசம் பிள்ளையும் விடாமல், 'அதுக்கு? சுள்ளி பொறுக்க இவன்தான் போவணுமோ? பெஞ்சாதியை அனுப்பிட்டு, இங்கவற்றது. வேலை இருக்குன்னு தெரியுமில்லே!’’ என்று கேட் டார்.

ராமன் மெனனமாக ஆறுமுகத்தின் முகத்தைப் பார்த்தான்.

'ஏண்டர முழிக்கறிங்க. சம்பாதிக்கிற காசை ஒழுங்கா வீட்டிலே கொண்டு போய்க் கொடுத்தா தாண்டா, கட்டினவள் வாய்க்கு ருசியா பண்ணிப் போடுவா. கிடைக்கிறதையெல்லாம் மதுக் கடைக்கு அழுதுட்டு, வீட்டுக்குப் போனா; வெறுங்கை முழும்போடுமா? இல்லே, கழியாலே அடிச்சு மண்டையைப் பொளந்தா, கஞ்சிக்குத் தொட்டுக்க பதார்த்தம் ஆகாசத்திலேருந்து