பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

4

பழக்கம் பள்ளிச் சிறுவன் முதல்-படுகிழவன் வரை, வயது வரம்பின்றி எந்த வயதைச் சேர்ந் தவர்களிடையேயும் பரவலாகப் பரவிவிட் டாலும்

மரியுவானா, கஞ்சா; ஹிராயின்; எல்.எஸ்.டி. மாத்திரைகள்:பிரெளன்ஷ-கர்போன்ற போதை மருந்துப் பழக்கம் இன்று அதிக அளவில் இளை ஞர் மத்தியில் பிரபலமாகி விட்டதைக் கண்டு உலகம் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளது.

அமெரிக்காவில் 12 வயது முதல் 17 வயது வரையிலான இளம் பிள்ளைகளில் கால்வாசிப் பேருக்குமேல், போதை மருந்துகளைப் பயன் படுத்தி வருவதாகவும்; பிரெஞ்சு நாட்டு பள்ளிக் குழந்தைகளில் 30 சதவிகிதத்திற்கு மேல் போதை மருந்துகளை முறையாகப் பயன்படுத்தி வருவ தாகவும் ஐ. நா. பிரிவு 1976-ல் வெளியிட்டுள்ள அறிக்கையொன்று கூறுகிறது.

மத்திய கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா, இத்தாலி, போன்ற பல நாடுகளுடன் ஒப்பிடும் போது; போதை மருந்து பழக்கத்திற்கு அடிமை யாவதில் உலகில் அமெரிக்காவே முதலிடம்

வகிக்கிறது.

கொகெய்ன், ஹிராயின், ம. ரி யு வா னா, போன்ற போதை மருந்து ஊசி போட்டுக் கொள்ளாமல் உயிர் வாழவே முடியாத அள விற்கு இளைஞர்கள் இன்று பாழ்பட்டுள்ளனர்.