பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

62

போயிடு; இல்லே கொலையே விழும்,’’ என்று கத்தினான்.

எல்லாவற்றிற்கும் சிகரம்வைத்தாற் போல்தங்களைப் பலவேசம் பிள்ளையுடன் இணைத்துப் பேசியதைக் கேட்டபோது பூவாயி வெடித்துப் போனாள்.

இந்தாய்யா, எங்களைப் போயா நீ மானங் கெட்ட கழுதேன்னு கேக்கறே? இவ்வளவு ஆம் பிள்ளைங்க மத்திலே, ஒரு பொம்பிளையை இந்த ஆளு கை நீட்டி அடிச்சிருக்கான், அதைக் கேக்கத் துப்பில்லாமே; அத்தினி பேரும் கூடி இருந்து குடிக்கறிங்களே! உங்களுக்கு. வெட்கம் மானம், ரோசம் இருக்கான்னு நாங்க கேக்கணும்.

ஐயா!

இடுப்புத் துணி போனது தெரியாமேக் கண்ணு மண்ணு தெரியாமேக் குடிச்சிட்டு; சாக் கடையிலே புழுப்போலே புறண்டுட்டுவற்ற நீயா என்கிட்டே மானம், மரியாதையைப் பற்றிப் பேசறே!

போலிசைக் கண்டு எங்களுக்குப் பயமில்லே; ஆனா... போவறதுக்கு முந்தி பொன்னியை கை நீட்டி அடிச்ச இந்த ஆளுக்கு ஒரு பாடம் கற்பிக் காமே, போகப்போறதில்லே... என்று கூறிவிட்டு; தன் கூட்டத்தைப் பார்த்து, 'பாரத மாதவுக்கு ஜே??? என்று ஆவேசமாகக் கத்தினாள்; கடை