பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

64

கடைச் சாமன்களும் நஷ்டமாயிடுச்சே. யாரு குடுப்பாங்க! நானைக்கு உங்க அத்தினி பேரையும் போலிசிலே ஒப்படைக்கப்போறேன் பாருங்கோ.: என்று கோபமாகக் கூறிக்கொண்டே கடையைப் பூட்டிக் கொண்டு வேகமாகப் போனான். காடையன்.

நேரம் கரைந்து கொண்டிருந்தது.

கள்ளுக்கடையின் முன்னால் கூடியிருந்த மற்றவர்கள் எல்லாம் போனபின்பும்; ஆறுமுகம், ராமன், பக்கிரி, தொப்பளான், குப்பன் போன்ற கூட்டாளிகள் மட்டும், அந்த இடத்தை விட்டு நகர மனமில்லாமலோ - அதிகம் குடித்துவிட்டதினால் நகர முடியாமலோ பெரும் கவலையுடன் உட் கார்ந்திருந்தனர்.

அவர்களுடைய கவலைக்கு முக்கிய காரணம், நாளைக்கு, காடையன் கடையைத் திறப்பானா, மாட்டானா என்பதே ஆகும். ஆனால் இப்படி யொரு நிலைமை யாரால் ஏற்பட்டது என்று எண்ணிப் பார்த்தபோது, அவர்களது கோபமெல் லாம், ஒன்று திரண்டு பலவேசம் பிள்ளை மீதே தாக்கியது .

'வர வர இந்த பலவேசம், நமக்கு ரொம்ப தொல்லை கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு அண்ணேஎன்று வெறுப்போடு கூறினான் பக்கிரி.