பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

5

இந்நிலைக்கு முக்கிய பொறுப்பேற்க வேண்டிய வர்கள் பெற்றோர்களே !

மதுவையும், போதைப் பொருட்களையும் உபயோகிக்கும் பெற்றோர்கள்; இவற்றைத் தங்கள் குழந்தைகள் எதிரிலேயே உபயோகிக் கிறார்கள். உபயோகித்த பிறகு, அவற்றை அவர் கள் பத்திரப்படுத்தி வைப்பதும் இல்லை. பிள்ளைகளின் பார்வையில் பட்டுக் கொண் டிருக்கும் அந்தப் போதைப் பொருள்கள் அவர் களை உட்கொள்ளத் துாண்டி நாளடைவில், அந்தக் குழந்தைகளும், பெற்றோருக்குத் தெரியா மலே அந்தக் கொடிய பழக்கத்திற்கு அடிமை யாகி விடுகிறார்கள்.

பிலடெல்பியா பொது மருத்துவமனை யொன்றில் பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகளில், 14 பேருக்கு ஒரு குழந்தை போதை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையான தாய்க்குப் பிறந்த குழந்தையாக இருந்ததாக ஒர் ஆய்வு குறிப்பிடு கிறது.

தீய மதுப் பழக்கத்தை எந்த நாட்டினரும்எந்த மதத்தினரும் ஆதரிப்பதில்லை. அறநூல் களும்-மதுவின் தீமையையே எடுத்து ஒதுகின் றன. அப்படியிருந்தும்-உலகம் முழுதும் எப் படியோ இந்தத் தீய பழக்கம் வெகுவாகப் பரவி விட்டது. இதில் நாட்டுக்கு நாடு கூடுதல் குறைவு இருக்கலாமே ஒழிய பாகுபாடின்றி மதுப் பழக்கம் பரவலாக மனிதரைக் கோரமாகப்

பற்றிக் கொண்டுவிட்டது.