பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

81

பொன்னிக்குத் தெரியாமெ, அவ பெட்டி யிலே இருந்து வெள்ளிக் கொலுசை எடுத்து மார்வாடி கடையிலே வெச்சு, சரக்கு வாங்கி வந் திருக்கேன். பொன்னிக்குத் தெரிஞ்சா உசிரையே வுட்டுடுவா’.

'கவலைப் பட ாதே குப்பா...?

‘நான் குப்பன் இல்லே அண்ணே, ராமன். அவன் கழுத்தைச் சுற்றித் தன் வலக்கையைப் போட்டுக் கொண்டபடி, தல்ல உசத்திச் சரக்கா வாங்கியாந்திருக்கே ராமா. கவலைப்படாதே; வேலைக்குப் போயி பணம் கிடைச்சதும், முதல்லே. உன் கடனைத் தீர்த்துப்புட்டுத்தான் மறு சோலி” என்றான் ஆறுமுகம்.

அத்தப்பத்தி இப்போ என்ன அண்னே? சும்மா அலட்டிக்காமெ; நிம்மதியாச் சாப்பிடு என்று ராமன் சமாதானப் படுத்திக் கொண்டிருக் கும்போதே, சுப்பன் குறுக்கிட்டு, அண்ணே, அந்தச் பொட்டைப் படைங்க இன்னிக்கும் கலாட்டாப் பண்ண வந்தாலும் வரும். கள்ளுக் கடையிலே காணோம்னா, சவுக்குத் தோப்புக்குப் போயிருப்பேன்னு எம்பெண்சாதிக்குத் தெரியும். அவ எல்லாப் பட்டாளத்தையும் இழுத்துக்கிட்டு, இங்கே வந்தாலும் வந்துடுவாளுக, நாம சீக்கிரமா இங்கிருந்து போயிடனும்’ என்று ஒரு எச்சரிக்கை போல் கூறினான். a o -

மய-6