பக்கம்:மருதநில மங்கை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240புலவர் கா. கோவிந்தன்


‘உறைவரை நிறுத்தகோல் உயிர்திறம் பெயர்ப்பான்போல் 15
முறைசெய்தி என நின்னை மொழிவது கெடாதோதான்,
அழிபடர் வருத்த நின் அளிவேண்டிக் கலங்கியாள்
பழிதபு வாள்முகம் பசப்பு:ஊரக் காணுங்கால்?

ஆங்கு,
தொன்னலம் இழந்தோள், நீ துணைஎனப் புணர்ந்தவள் 20
இன்னுறல் வியன்மார்ப! இனையையால் கொடிது என
நின்னையான் கழறுதல் வேண்டுமோ
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே?”

தலைவன் பரத்தையிற் பிரியத், தலைவி வருத்தம் கண்ட சான்றோர், தலைவனை அடுத்து, அவன் பரத்தையர் ஒழுக்கம் நீங்கக் கூறியது இது.

1. ஈண்டு – இவ்வுலகில்; நீர்மிசை – கடல்மேல்; சீக்கும் – அழிக்கும்; 2. வேண்டாதார் – பகைவர்; உட்க – நடுங்க; வெருவந்த – அச்சம் தரும்; 4. தண்மையும் – அருளும்; 5. மாண்ட– மாட்சிமைப் பட்ட; 6, யாண்டோரும் – உலகில் உள்ள அனைவரும்; இரங்கு – ஒலிக்கும்; 7. அருந்தவ முதல்வன் – ஆலின்கீழ் இருந்து அறம் உரைக்கும் தட்சிணாமூர்த்தி; 9. நல்கி – அன்புகாட்டி; தெளித்த – உறுதி கூறிய; நசை–பற்றுக்கோடு; 10. பனி – நீர்; 11. வான் – மேகம்; பொழிந்தற்றா. – பெய்தது போல; 12. நசைவாட்டாய் – வேண்டி யதைக் கொடாமல்; அவர் ஆசையை அழிக்கமாட்டாய்; 13. அஞர் – துன்பம்; 14. கோல் – வேலைப்பாடுமிக்க; இறை – முன்கை ; ஊர – கழல; 15. உயிர் திறம் பெயர்ப்பான் – உயிரைக் கவரும் காலன்; 17. அழிபடர் – மிக்க துன்பம்; 18. தபு – நீங்கிய; 21. இன்உறல் வியன்மார்பு – மணந்த மகளிர்க்கு இன்பம் தரும் அகன்ற மார்பு; இனையை–இத்தன்மையனாயினாய்; 23. என்னோர்கள் – எத்தகை யோர்; இடும்பை – துன்பத்தை; களைந்தீவாய் – போக்குகின்ற.

—x—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதநில_மங்கை.pdf/242&oldid=1130267" இலிருந்து மீள்விக்கப்பட்டது