பக்கம்:மீனோட்டம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 மீனோட்டம் "அம்பி, உன் வீட்டு மனுஷாளும் நாங்களும் ஒரே ளிட்டிலே ஒரு பத்து வருஷம் சேர்ந்தாப் போலே குடியிருந்து ஒரே குடும்பமா பழகி விட்டோம். எனக்குக் கூடப்பிறந்தவா இல்லை. உன்னை என் தம்பின்னு வெச்சிண்டு உன்னண்டை விட்டுச் சொல்றேன்; நான் இனிமேல் இருந்து கொட்டிக் கழிக்கப் போறது ஒண்னுமில்லே. ஏதோ பூர்வ புண்ணியம் கொஞ்சம் கணக்கில் இருந்ததாலே, நல்ல இடத்திலே வாழ்க்கைப் பட்டேன்; நல்லாம்படையானும் நல்ல மாமி யாருமாக் கிடைச்சா கடுகு தாளிச்சுக் கொட்டறத்திலேருந்து கல்பானை தேய்க்கற வரைக்கும் இங்கே வந்து தான் கத்துண் டேன். எவ்வளவோ பொறுமையோடு தான் எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தா. ஆனால் நான் புகுந்த வீட்டிலே ஒருத்தருக்கும் ஒரு சுகம் கொடுத்ததில்லை. அறுபது நாழியும் வியாதியும் வெக்கையுமாகவே என்னைப் பிடுங்கித் தின்னுண்டே இருந்திருக்கு. ஆஸ்பத்திரிக்கும் வைத்தியனுக் கும் அள்ளி அள்ளிக் கொடுத்தே இந்தக் குடும்பத்தைக் குட்டிச் சுவராக்கி விட்டேன். எனக்கு உடம்பு சரியா இருந் திருந்தால் மாமி ஆபுசு இன்னும் அஞ்சு வருஷமாவது நீடிச் சிருக்கும். விளையாட்டா இந்தக் காலிலே சிராம்பு குத்தி, நான் படுத்ததிலிருந்து எனக்குச் சிசுருவிை பண்ணிப் பண்ணி அவள் உயிரையும் குடிச்சேன். இனிமேல் நான் இன்னமும் நாறாமல் முன்னால் போகனுமே என்கிற ஒரு கவலைதான் எனக்கு, “என்னால் அவருக்கு என்ன சுகம்? ஒரு நாளைக்கு ஒரு படுக்கை தட்டிப் போட்டேன், ஒரு வேஷ்டியைக் கசக்கிப் பிழிஞ்சேன் என்று உண்டா? கேவலம் நான்-நான் பண்ணிப் போட வேண்டிய சமையலைக் கூட அவர் எனக்குப் பண்ணிப் போட வேண்டியிருக்-கு-ஊ-ஊ...” மாமி முகத்தைக் கைகளில் புதைத்துக் கொண்டு விக்கி னாள். திடீரென்று ஏதோ நெருப்பில் சாய்ந்து, தீயும் வாசனை அங்குப் பரவியது. அடுக்குள்ளில் பால் தான் பொங்கிற்றோ, அல்லது இங்கு மாமி வயிறுதான் பொங்கும் நாற்றமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/113&oldid=870202" இலிருந்து மீள்விக்கப்பட்டது