பக்கம்:மீனோட்டம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை #13 "ஒரு ஆளைப் போட்டுக் கொள்ளவோ எங்களுக்குக் கட்டல்லை. ஒரு நாளைப் பார்த்தால் போல் இவர் இன்னும் எவ்வளவு தவிப்பார்? என்னை ஒரு நாளேனும் வாயைத் திறந்து திட்ட மாட்டாரா என்று ஏங்கறேன். ஆனால் எனக்குத்தான் ஒசந்த பதவி கிட்டியிருக்கே, என்னை எப்படித் திட்டுவார்? எல்லோரும் கீழேயிருந்தால் நான் கட்டில்லேயிருக்கேன்; எல்லாரும் உட்கார்ந்து சாப்பிட்டால், நான் படுத்துண்டு சாப்பிடறேன்; எல்லாரும் எல்லாருக்கும் உபகாரமாயிருந்தால், எல்லாரும் எனக்கு உபயோக மாயிருக்கணும்! எப்படியிருக்கு அம்பி, இது? வேடிக்கையா யில்லே’’ மாமி கல கல வென்று சிரித்தாள். அவன் வாய் திறக்கவில்லை. அவள் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்? ஆனால் அவள் பதிலும் எதிர்பார்க்கவில்லை. வாய் விட்டு ஓடும் அவள் சிந்தனைக்கு அவன் இப்போதைக்கு வாய் திறவாச் சாட்சியாயிருந்தான்; அவ்வளவுதான். 'நானே ஒரு நாசக் கிரஹம் என்றுதான் நினைக்கிறேன். என்னை ஒத்தரும் பாக்க வரக்கூடாது, கேட்க வரக்கூடாது. வந்தால் என் பாவம் அவர்களையும் ஒட்டிக் கொள்ளும், உன்னையே பார், கலியாணமானவுடன் மஞ்ச நீர்க்கோலத் துடன் பிள்ளையும் பெண்ணும் வந்தீர்கள்; வெற்றிலையும் தேங்காயும் என் கையில் கொடுத்திட்டு நமஸ்காரம் பண்ணிட்டு நீ நிமிர்ந்த போது, உன் முகம் ஜ்வலிக்கிற ஜ்வலிப்பைப் பார்த்துவிட்டு எனக்குத்தொண்டைஅடைச்சுது. அருகாமையிலேயே உன் ஆம்படையாளையும் பார்த்ததும் முதன் முதலாய் என் மனசில் என்ன தோணித்துத் தெரியுமா? அட, இவனைப் பெற இவள் போன ஜன்மத்தில் தெய்வத்துக்குச் கனகாபிஷேகமாய்த் தான் பண்ணியிருக் கணும்னு நினைச்சேன். எங்களுக்குள்ளே ஒரு வசனம் உண்டு, கண்ணும் குணமும் நிறைஞ்ச ஆம்படையானைப் பெற, போன ஜன்மத்தில் பகவானை எத்தனையோ விதமான புஷ்பங்களால் அர்ச்சித்திருக்கனும்’னு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/114&oldid=870204" இலிருந்து மீள்விக்கப்பட்டது