பக்கம்:மீனோட்டம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தை #25 'நீங்களேதான் பாருங்களேன். ஏதோ ஒரு குழந்தை யைப் பெற்றுவிட்டதால், பெரிதாய்ச் சாதித்துவிட்டதாயும், உங்களைத் தன் செளகரியப்படி சமைத்துக் கொள்ள முடி யும் என்றும் தானே உங்கள் மனைவி நினைத்துக் கொண்டிருக் கிறாள்? எல்லாம் கொண்டாடினால் தான் உறவு என்கிறதை அவள் மறந்துவிட்டாள். அவள் வாழ்க்கையையே அழித்து விடக்கூடிய சக்தியையும் செளகரியங்களையும் சமூகம் உங்க ளுக்குக் கொடுத்திருந்தும், நீங்கள் பயன்படுத்த அஞ்சு கிறீர்கள். நீங்கள் அவளை யஞ்சுகிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்காக அஞ்சுகிறீர்கள் என்று அறியவில்லை. அவள் மேலும் தப்பில்லை; இவ்வளவு தூரம் பிரியம் வைத்துவிட்டு, கடமையையும் பாராட்டிக் கொண்டு நீங்கள் திண்டாடினால், அவள் மேல் தப்பா? அவள் என்ன் செய்வாள்; தன் சுபாவத்தைத்தான் காட்டுகிறாள். பொறுமை, அன்பு, மேதை, லட்சியங்களில் வேரூன்றிய உங்கள் ஆண்மை-இவை அவளிடத்தில் வீண் செலாவணி. நீங்கள் கொண்டாடி ஒழுகும் லட்சியங்களுக்கே அவை செல்லுகிற இடத்தில் செல்லுபடியாகிறவரையில்தான் அவை களுக்கு வெற்றி. அவை தோற்கிற சமயத்தில் அவைகளின் தோல்வி ரொம்பவும் பயங்கரம்...அவள் ஏதோ முரட்டுத் தனத்தை மந்திரமாய்க் கொண்ட வண்டிக்காரனுக்கு வாழ்க் கைப்பட வேண்டியவள்; அவளிடம் நீங்கள் அறியாமல் மாட்டிக் கொண்டு விட்டீர்கள்...' அவன் காதைப்பொத்திக்கொண்டு கத்தினான்; வாயை மூடு வாயை மூடு வதைக்காதே!” சற்றுநேரம் இருவரும் மெளனமாயிருந்தனர். மேல் வானம் ரத்தச் செவேலாய் விட்டது. அதன் சாயை அவர்கள் மேலும், சுற்றியிருப்பவை மேலும் அடித்தது. இரவுக்கடங்குவதற்காக, பறவைகள் மந்தை மந்தையாய்ப் பறந்து போவதை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவரவர் மனம், அவரவர் எண்ணங்களில் மூழ்கிய வண்ணம். அவள் மெதுவாய், வானை நோக்கிய வண்ணமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/126&oldid=870228" இலிருந்து மீள்விக்கப்பட்டது