பக்கம்:மீனோட்டம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 மீனோட்டம் "நான் இப்பொ அவளைப் பற்றி நினைக்கவில்லை; உங்களைப் பற்றியும் நினைக்கவில்லை. மாதா பிதா பாவம் மக்கள் தலையில் என்கிற வசனம் பொய்க்காமல், உங்கள் இருவரிடையில் அகப்பட்டுக் கொண்டு தவிக்கும் அக்குழந் தையைப் பற்றித் தான் நினைக்கிறேன். அது அங்கேயே வளர்ந்தால் அப்பன் தெரியாக் குழந்தை; பலாத்காரமாய்த் தூக்கிக் கொண்டு வந்து நீங்கள் வளர்த்தால், ஆயி தெரி யாத குழந்தை; இத்தனையும் நேர்ந்த பின்னர், நீங்களிரு வரும் சேர்ந்து குடித்தனம் பண்ணினாலும், உங்கள் உறவின் கசப்பு அதைத் தாக்காமல் இருக்கப் போவதில்லை! கடைசி யில், அதுக்கென்ன சுகம்? நல்லவேளை ஒரு தேறுதலாவது இருக்கிறதே, பிள்ளையாய்ப் பிறந்திருக்கிறதே.என் மாதிரி பெண்ணாய்ப் பிறவாமல்!” 'ஏது சாவித்திரி, இன்னிக்குப் பிரமாதமாய்ப் பேசு கிறாய்?” "ஆமாம்”-அவள் கண்கள் வானிலிருந்திழிந்து நேருக்கு நேராய் அவன் பார்வையைச் சந்தித்தன. 'நான் ஏன் படிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? என்னைப் பற்றி ஒருவரிடமும் நான் சொன்னதில்லை. உங்க ளிடம் சொல்லுகிறேன்; என் தாயும் உங்கள் மனைவி போல் வாழாவெட்டியாய்ப் போனவள் தான். ஆனால் இம்மாதிரி அசட்டு அழும்பு பண்ணி, தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளவில்லை. விதி அவளை மோசம் செய்து விட்டது. என்ன நடந்தது தெரியுமோ? என் தாய் கிராமாந்தரத் தில் இளையாளாய் வாழ்க்கைப்பட்டாள். இந்தச் சம்பவம் நடக்கிறபோது நான் என் தாய் வயிற்றில் ஆறு மாதச் சிசு வாய் இருந்தேன். அப்பா எங்கேயோ வெளியூருக்குப் போயிருக்கிறார். உக்கிராண உள்ளே ஏதோ சாமான் எடுக்கப் போயிருந் திருக்காள் அம்மா, பரணிலிருந்து பாம்பு தொங்கறது. தெரி யல்லே. புஸ்'ஸுன்னு சீறி, படார்னு கன்னத்திலே போட்டுடுத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/127&oldid=870230" இலிருந்து மீள்விக்கப்பட்டது