பக்கம்:மீனோட்டம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி i51 வெட்டுவான். இதள் கட்டிண்டு வருவாள்.' திட்றத்தில் பிள்ளைன்னும் பார்க்கல்லே. நான்தான் தம்பி பொண்ணுன்னும் பார்க்கலே போகப் போக நெஞ்சில் ஒதமே வத்திப் போச்சு. இனி எழுந்திருக்கப் போவதில்லை. இத்தோடு சரின்னு தனக்கே தெரிஞ்சு போன பின் இருக் கிறவா மேல் போறவாளுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? பொறாமையா, பயமா, எதனால் இந்தக் கொடுரம்? ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டைன்னு நம்மால் முடிஞ்ச புலிப்பாலைக் கறந்து வந்து கொடுத்தாலும் செம்போடு மூஞ்சியில் வீசியெறிவார். - கடைகியில் தான் என்ன அவஸ்தை உயிர் தயாரானா லும் உடல் ஆகல்லே. உடம்பில் பூச்சியே வெச்சுப் போச்சு, உயிரும் உடலும் வாசலுக்கு வாசல் மல்லிட்டு, அங்கம் அங்கமா அடங்கி கடைசியில் உயிர் போச்சுன்னு ஆனதும் "ஐயோ'ன்னு அழுகைக்கு முன்னால் 'அப்பா டான்னு’ மூச்சுத்தான் தெரியறது. ஆனால் எங்கே போனார்? கூடத்து அலமாரியில் பானை யில், அஸ்தியாக இன்னும் புழுங்கிண்டுதான் இருக்கார். "ஒரு ஊரா, கோவிலா, குளமா, ஒரு விரதமா, ஜபமா, முழிப்பா-இந்த ஜென்மத்துக்கு ஒண்ணும் கிடையாது. ஒரு விமோசனமில்லாமல் இதோ இப்படியே போயிடப் போறேன். இந்த எலும்பையாவது எடுத்துப் போய் வருஷம் ஆவதற்குள் கங்கையில் கரை. கரைப்பையா இல்லை இந்த சமயத்துக்குத் தஞ்சாவூர் பொம்மை மாதிரி தலையை ஆட்டிப்பிட்டு அப்புறம். 'ஹாய்யா, இருந்துடறையா?ன்னு வாயைத் திறந்து சொல்லு'ன்னு கையை அடிச்சு வாங்கிக்காத தோஷமா வாக்கை வாங்கிண்டு தானே ஆவி பிரிஞ்சுது. பாவம் அத்தை பூச்சியோ புழுவோ, நாத்தமோ, அழுகலோ, வார்த்தையோ கொடுமையோ, இருந்த வரைக் கும் அவராவது இருந்தார். குழந்தையில்லா வீட்டில் அவர் தான் குழந்தையாக சிசுருவுையில். ராமுழிச்சு, பகல் தூங்கி விழுந்து போகப் போகப் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/152&oldid=870285" இலிருந்து மீள்விக்கப்பட்டது