பக்கம்:மீனோட்டம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மீனோட்டம் நீட்டுவோருக்கு, மாடப்பிறையில் கொட்டியிருக்கும் திருநீறைச் சுட்டிக் காட்டி விட்டுப் போய்க் கொண்டே இருக் கலாம். இங்கே தோடா போடுவோருமில்லை. சாட்டை சொடுக்குவோருமில்லே. எல்லாம் அப்பப்போ உடல் தென்புக்கும் மன அசதிக்கும் ஏற்றபடி, ஆனால் வரவர இப்பவே துரக்கந்தான். சமையலாச்சு. இடம் பெருக்கி இலை போடுவதற்குள் சாய்வுத் திண்ணையில் ஒரு சின்ன மருளாட்டம். தோளைத் தொட்டு எழுப்பலையோ அப்படியே காலும் நீட்டிக் கொள்ளும். அப்புறம் சாப்பாடு கூப்பாடுதான். சாப்பாடு ஆச்சா, பாக்கை ஊதி வாயில் போட்டு, வெற்றிலையை தொடையில் துடைத்து மூணாவதைத் தடவும் போதே தலை சாய்ந்துவிடும். அதென்ன துரக்கமோ? உள்ளங்காலில் சுறீல்’னு ஒரு தணலை வெச்சால் என்ன? மூஞ்சியில் ஜலத்தைக் கொட்டட்டுமா? எனக்கே துரங்கறவாளைக் கண்டால் ஆகல்லே. ஆனால் அத்தை முழிச்சுண்டுதானே யிருந்தார்; அதுவுந்தான் ஆச்சோ? அத்தை கண்மூடறவரை கண்கொட்டல்லே, போன அப்புறம்கூட இமையை யாரோ இழுத்து மூடி அந்த விறைச்ச பார்வையை மறைக்கும் படியாச்சு. யார் என்ன செய்யறா, ஏது சொல்றான்னு கவனிச்சு கவனிச்சு அத்தைக்கு கண்மூடவே மறந்து போச்சு. அதுவும் கடைசி காலந்திரத்தில் ஆளை வதைச்சே எடுத்துட்டார். எண்பதும் தாண்டி இருந்த வயசில் கடைசி பத்து வருஷம் படுத்த படுக்கையில் தொட்டதெல்லாம் குத்தம்தான். எதிரே நின்னாலே குத்தம்தான். என்னடி பாக்கறே? மூச்சு போகலையேன்னா சரின்னு கண் மறைவா வளைய வந்தாலோ: போயிடுங்கோ, ரெண்டு பேரும் போயிடுங்கோ! எதிரே இருந்தால் தானே கடையற தொண்டையில் பாலூத்த வேண்டிவரும்! அதுசாக்கில் என் உசிர் தங்கிடு மோன்னு கவலை. இழுத்துண்டிருக்கிறது அடங்கறதுக்குள் ரெண்டு பேரும் மூங்கிலைத் தேடப் போயிட்டா. அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/151&oldid=870284" இலிருந்து மீள்விக்கப்பட்டது