பக்கம்:மீனோட்டம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி - 159 '-த்வஜஸ்தம்பத் தடியில் குப்புறக் கிடந்தான். ரெண்டு சன்னதி பூஜையையும் முடிச்சிட்டு வந்தப்புறம்கூட ஆள் அப்படியே படுத்துட்டுக் கிடக்கான். நமஸ்காரம்னாகூட, இவ்வளவு நேரமா என்ன? கூப்பிட்ட்ால் பேச்சு மூச்சு இல்லை. எனக்குப் பயமாப் போச்சு. புரட்டிப் பார்த்தால் உடம்பு உலையாய்க் காயுது. என்ன செய்யறது? அப்படியே விட்டுட்டு வர மனமில்லை.” அவன் சமாதானமாய்ச் சொல்லவில்லை. சமாச்சார் மாய்த்தான் சொல்லிக் கொண்டிருந்தான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவளுக்குப் பதில் பேசியே பழக்கமில்லை. 'யார், ஏது, ஏன்? இந்த வீட்டில் கால் வைத்த நாள் முதல் அவள் எதற்கும் கேட்டதேயில்லை, அவளுக்குக் கேட்கவும் தெரியாது. அப்படிக் கேட்கும்படி நேர்ந்ததுமில்லை. அந்த ஆளைக் கவனித்தபடி நின்றாள். அவள் தோளில் ஜலமுத்துக்கள் இன்னும் துளித்து நின்றன. குளிப்பில் மயிர்ப்பிரிகள் ஒன்றிரண்டு நனைந்து கன்னத்தில் ஒட்டிக் கொண்டு நின்றன. நெற்றியில் பற்றிய மஞ்சள் பளிரிட்டது, X X X நினைவு திரும்ப மூன்று நாட்கள் ஆயின.-உடம்பு புரட்டினது புரட்டினபடி, மலஜலம் எடுத்து, உடைமாற்றி, வாயைத் திறந்து, கிட்டின பல்லை நெகிழ்த்தி, ஒளடதம் ஊற்றி, கண் விழித்து...இவன் யாரோ நான் யாரோ, ஜாதி என்னவோ? இத்தனை பாடும் இவன் மேல் இரக்கம் காரணமா, அல்ல, இவன் நம்மடியில் வாயைப் பிளந்து வச்சால் என்ன ஆகறது. என்கிற பயமா? நட்டாற்றில் கரடியைக் கட்டிக் கொண்ட பிராம்மணன் போல் இவன் விதியுடன் எங்கள் விதியும் எப்படி விழைந்தது? ஏன் விழையனும்? என ஆச்சர்யமுற, தோன்றக் கூட இப்போது நேர மில்லை. -நீர்த்துப் போன மூட்டத்தின் கீழ் மாட்டிக் கொண்ட ஒற்றைப் ப்ொறியைச் சுடராக்க, மாற்றி மாற்றி ஊதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/160&oldid=870301" இலிருந்து மீள்விக்கப்பட்டது