பக்கம்:மீனோட்டம்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 மீனோட்டம் ஏந்திண்டு எங்கிருந்தாவது ஒரு தாயாதி என் பங்குன்னு முளைச்சால்? பங்குக்கு மாத்திரம் கிளை கிளையா களைக்குமே! இன்னும் கொஞ்சம் ஆழமா தோண்டினால் இரண்டு பேருக்குமேயில்லை. வீடு கோவில் சொத்துன்னு தீர்வையா சாசனமே கிடைத்துவிடும். எல்லாம் என்னுடையது. கடவுள் நியாயம், குரங்கு நியாயம், ரெண்டுக்கும் மிஞ்சின கோர்ட் அப்பீலே கிடையாது. நாளைக்குக் காசி. 烹 X X அப்போது தான் குளித்துவிட்டு-இன்னும் சரியாகத் துவட்டிக் கொள்ளக்கூட இல்லை, வாசற் கத்வை அவசர மாய்த் தட்டும் சத்தம் கேட்டது. புடவையைச் சுற்றிக் கொண்டு வந்து கதவைத் திறந்தாள். ஒரு ஆளை-பாதிக்கு மேல் அவன் உடல் பாரத்தை தான் தாங்கிக் கொண்டு அவள் கணவன் வாசலில் நின்றான். கதவை இன்னும் அகலத்திறந்ததும், உள்ளே தாண்டி வந்து கனத்தை கடைத்திண்ணையில் கிடத்தி, முகத்தில் தோய்ந்த மயிரை ஒதுக்கியதும்-சொல்லத் தேவையில்லை. கண்டாலே தெரிந்தது அங்கு அடிக்கும் ஜுரவேகம், உள்ளே போய்த் தலையணையை எடுத்து வந்தாள். அவள் கணவன் தலையைத் துக்கிக் கொள்ள, அவள் தல்ை யனையை அண்டக் கொடுத்ததும், அவன் தலையை அதன் மேல் இறக்கிவிட்டு இருவரும் ஒரு நிமிடம் அந்த முகத்தைக் கவனித்து நின்றனர். ஸ்மரணை யிருப்பதாகத் தெரியவில்லை. அவள் கணவன் சென்ற பின்னரும் அவள் நகரவில்லை. அந்த முகத்தில் தாடி முட்கள் கருகருவென நின்றன. தலை யில் காடு மாதிரி எவ்வள்வு மயிர் இப்போதைக்கு முகத்தை மூக்கும் முழியும்தான் அடைத்துக் கொண்டிருந்தன. ஜுரவேகமாயு மிருக்கலாம், கொல்லைப்புறத்திலிருந்து அவள் கணவன் வந்தான். பறித்துவந்த மூலிகைகளைத் தோள். துண்டிலிருந்து திண்ணை யில் கொட்டி, ஆய்வதற்கு உட்கார்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/159&oldid=870297" இலிருந்து மீள்விக்கப்பட்டது