பக்கம்:மீனோட்டம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#60 மீனோட்டம் போட்டியில் திணறுவது எங்கள் மூச்சா? இல்லை இவன் மூச்சா? யார் அவஸ்தை அதிகம்? என்று சிந்திக்க அந்த அவஸ்தையை நினைவு பூர்வமாய்ப் படுவதற்குப் போது இல்லை. X X X மசியூற்றிலிருந்து பொங்கிவரும் இருள் பிந்துக்கள்மேல் கவிந்து கடலாய்ப் பெருகி அதில் மூழ்கிப் போனது தான் கடைசி நினைப்பு. அதன்மேல் இருள் அலைகள் உடைந்து வீழ்ந்து அதைக் கடலின் நடுவயிற்றுள் இழுத்துத் கொண்ட னவா, அல்ல ஏந்திச் சென்று கரையோரம் ஒதுக்கினவா? அறிய நினைப்பில்லை. எது கரை? கடலுக்கும் கரைக்கும், மலைக்கும் மடுவுக்கும் அடையாளம் அறிய நினைப்பில்லை. அறிய நினைப்பில்லை என்று அறியத் தோன்றுவதே மீளும் நினைப்பின் முதல் ஊன்றுகோல். அறியத் தோன்றிய சர்வ அமைதியினின்று காதோடு காது வைத்த ரகஸ்யமாய், சீடனுக்குக் குருவின் உபதேச மந்தரமாய், மந்திரத்தின் உருப்புரியாது. ஆனால் உரு அதனுள் அடங்கியதாய் ரீங்காரம் ஒன்று குதித் தெழுகின்றது. அந்த உயிரோசையில் நினைப்பு இல்லையென்ற நினைப்பு கவ்விக் கொண்டதும், எங்கும் சூழ்ந்த இருளில் விரிசல் ஒடி, இல்லை. இருக்கிறது எனும் தோன்றல்களின் இடைவிளிம்பு கள் ஆங்காங்கே படர்ந்து, தோன்றி மறைந்து மீண்டும் தெரிவதே ஒளியின் உதயதரிசனம், அகத்தின் மாட்சி, நினைவின் மீட்சி. அது நேரும் சமயம் அவள் அடுக்குளில் வேலையாய் இருந்தாள். அவன் கோவிலுக்குப் போயிருந்தான். முனகல் சத்தம் கேட்டு ஓடி வந்தாள். கரையில் தூக்கிப் போட்ட மீன் போல நோயாளியின் வாய் திறந்து மூடித் திறந்து ஏதோ சைகையில் தவித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/161&oldid=870302" இலிருந்து மீள்விக்கப்பட்டது