பக்கம்:மீனோட்டம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துரசி 35 சுட்டடாலில் நாக்கைப் பொரித்துக் கொண்டதால் பாலே சுடும் என்று ஆகிவிடுமா? நான், என் மனோவேகத்தில் ஏதாவது உளறியிருந்தால் மன்னிக்க வேண்டும் -நல்ல வேளையாய் என் குடும்பம் உங்கள் தாயாருக்குப் புதிதல்ல. என்னையும் என் மனைவியையும் எங்களுக்குக் கவியாணம் ஆகு முன்னரே அவள் அறிவாள்-’’ கடிதத்தை வீசி ஒருபுறம் எறிந்தான். எல்லாருமே கடிதம் எழுதுவதில் சாமர்த்தியமாய்த்தான் இருக்கிறார்கள். வேகமாய் அறையில் முன்னும் பின்னுமாய் உலாவ ஆரம்பித்தான். அக்கடிதம் அவன் மனதை வெகுவாய்க் கிளறிவிட்டது. இன்று முழுதுமே என்னென்று தெரிய வில்லை, அவனுக்கு எதைக் கண்டாலும் கோபமாய் வந்தது. எதிர் வீட்டில் ஒரு பெண் பிடில் பயிலும் சப்தம் ஜன்னல் வழி காற்றில் மிதந்து வந்தது. ஒரு பாட்டின் ஒரு அடி பிடி படவில்லை போலும், திரும்பத் திரும்ப அதையே வாசித்துக் கொண்டிருந்தாள், ஒரே மாதிரியாக அதே இடத்தில் அதே தப்பைப் பண்ணிக்கொண்டு. இப்பொழுதைய மனநிலையில் அது காதைப் பொளிந்தது. எரிச்சலாய் வந்தது. ஜன்னலைப் படாரென்று சாத்திவிட்டுத் திரும்பினான். எதிரே சுவற்றில் மாட்டியிருக்கும் படத்திலிருந்து அவன் மனைவி அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவனைக் கேலி செய்வது போலிருந்தது. பின்னால் கையைக் கட்டிக்கொண்டு மேலுதட்டை கீழ்ப்பல்லால் கவ்விக் சொண்டு நின்றான். பெருஞ் சீற்றம் அவனுள் எழுந்தது. "உன்னைப்பற்றி நினைக்க வேண்டுமென்றா? இல்லைஎன்ற வார்த்தைகளை வாய்க்குள் உருவாக்குகையில், நாக்கு மூடிய வாயின் மேற்கூரையைப் பிளக்க முயன்றது. விட்டத்திலிருந்து ஒரு பல்லி கட், கட்’ என்று பேசியது. ‘நான் நினைக்கச் சொல்லவில்லையே!” 'நீ எனக்கிருந்த ஆதரவிற்கும் அரவணைப்பிற்கும்!” என்றான் மறுபடியும், பல்லைக் கடித்துக்கொண்டு, எந்தத் தினுசில் அவள் சரியாயில்லை என்று திருஷ்டாந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/36&oldid=870372" இலிருந்து மீள்விக்கப்பட்டது