பக்கம்:மீனோட்டம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மீனோட்டம் மாய் இப்பொழுது கூடச் சொல்ல முடியவில்லை. அவளுடன் நடத்திய வாழ்க்கை, வண்ணான் மடியிலிருந்து கட்டிய துணி போலிருந்தது. தேடினால் முட்கள் அகப்படா. ஆனால் குத்திக்கொண்டேயிருக்கும். ஓரிடத்து முள்ளை யெடுத்தால் இன்னொரு இடம் குத்திக்கொண்டிருக்கும். அவளுடைய காரணமற்ற கோபங்களும், சமயமற்ற சிரிப்புக்களும், பிறருக்கு க்ஷ்டம் நேர்ந்தாலும் தன் இஷ்டத்தைப் பூர்த்தி செய்து கொள்ளும் பிடிவாதமும், சிறுசிறு அசட்டுத் தனங் களும் அவளுடன் நடத்திய வாழ்க்கையை ஒரு தொடர்ந்த வேதனையாக்கி விட்டன. கடைசி காலத்தில்கூட அவள் மனஸ்தாபத்துடன்தான் போனாள். நவராத்ரி அவள் உடன் பிறந்தவன், சாதாரண மாய்ப் பார்க்க வந்திருக்கையில், திடீரென்று பிறந்த வீட்டுச் சபலம் கண்டு கொலுப் பார்க்கப் போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, அவனுடைய செளகரியங்களையும் சம்ம தத்தையும் பொருட்படுத்தாமல் அவள் தம்பி சொல்லும் புத்திமதிகளையும் கேட்காமல் அழுது அழுச்சாட்டியம்பண்ணி குழந்தையைக் கூட்டிக் கொண்டு தம்பியுடன் பிறந்தகம் போய் விட்டாள். அச்சமயம் அவள் மேல் அவனுக்குக் கடுங்கோபம்தான். அவள் திரும்பி வந்தால் அவளைப் படியேற விடுவதில்லை என்று கறுவிக் கொண்டிருந்தான். அடுத்த நாளைக்கடுத்த நாள் அவுன் மாமனாரிடமிருத்து கடிதம் வந்தது. பெண்ணின் அசட்டுத்தனத்துக்கு மன்னிப்புக்கோரி. தானே அவளைக் கொண்டு வந்து விடுவதாக, ஆனால் மனம் இளகவில்லை. வைரம் முற்றியது. அதற்கடுத்த நாள் ஆபிஸுக்குத் தந்தி வந்தது. அவன் மனைவிக்கு காலரா கண்டு ஆபத்தான நிலையிலிருக்கிறாள் என்று. இந்தத் தந்தியே ஒரு சூழ்ச்சியா யிருக்கும் என்று சந்தேகம் அடித்துக் கொண்டாலும் மனம் கேட்கவில்லை. ஆத்திரம் எல்லாம் எங்கோ பறத்தோடிப் போயிற்று. அன்றிரவு ரயிலையே பிடித்து எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிக்கொண்டு போனான். வாசலில் பாப்பாவை இடுப்பில் தூக்கிய வண்ணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/37&oldid=870374" இலிருந்து மீள்விக்கப்பட்டது